தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்
31.12.2025 ந் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக – விகாராதிபதியுடன் அரசாங்க அதிபர் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அத் தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) அரசாங்க அதிபர் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும் அக் கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக பொருத்தமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் அரசாங்க அதிபர் அவர்களிடம் தெரிவித்தார்.
வணக்கத்துக்குரிய விகாராதிபதி அவர்களுடன் கலந்துரையாடி பின்னர் திரும்பும் வழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.

