சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு –

சுதந்திர தினம் கரிநாள்; பேரணிக்கு வலுசேர்க்க அழைப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டம் சுதந்திர தினம் கரிநாள் என பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்தனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (01), இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு

கேணல் கிட்டு : ஒரு கடிதம், ஒரு வாழ்வு, ஒரு தேசியத் தத்துவம் 𑁍 ஒரு புரட்சிகர மனதின் அறிவுசார், அறம்சார் மற்றும் வரலாற்று வாசிப்பு ✦ அறிமுகம் : காலத்தைக் கடந்த ஒரு கடிதம் 1991 அக்டோபர் 21 அன்று, கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்) அவர்கள் ஜெனீவா நகரிலிருந்து தனது மனைவி டாலி அவர்களுக்கு ஒரு மிகுந்த தனிப்பட்ட கடிதத்தை எழுதினார். முதற்பார்வையில் இது ஒரு தம்பதியரின் தனிப்பட்ட உரையாடலாகத் தோன்றினாலும், காலப்போக்கில் அது ஒரு தத்துவ அறிக்கையாகவும், ஒரு அரசியல் சாட்சியமாகவும், மேலும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான அறவழி வழிகாட்டியாகவும் விரிவடைகிறது. முப்பத்தி மூன்று ஆண்டுகள் கடந்தபின், 2026 ஜனவரி 16 அன்று, இந்தக் கடிதம் வெறும் நினைவாக மட்டுமல்ல; ஒரு வரலாற்று ஆவணமாக உயர்ந்து நிற்கிறது. புலம்பெயர்ந்த வாழ்வின் உணர்வுப்பூர்வமான வலி,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு

அநுரகுமார அரசாங்கத்திலும் தொடரும் காணி அபகரிப்பு எதிர்வரும் 20/01/2026 ( புதன்கிழமை ) காலை ஒன்பது மணிக்கு யாழ்ப்பாணம் தீவகம் வடக்கு ஊர்காவற்துறை பிரதேசசெயலர் பிரிவில் எழுவைதீவு J/39 கிராம அலுவலர் பிரிவில் காளவாடியடைப்பு என்ற இடத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான 53 பேர்ச்சஸ் அளவுள்ள காணி சிறீலங்கா கடற்படையின் எலரா படையணி முகாம் அமைப்பதற்காக நில அளவைக் காரியாலயத்தினால் சுவீகரிப்படவுள்ளது. சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இதே காணியை கடற்படையினருக்காக அபகரிக்க முயன்றபோது எழுவைதீவு மக்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள–பௌத்தமயமாக்கல் : ஒரு கட்டமைப்பு அரசியல் எழுதியவர் ஈழத்து நிலவன்

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள–பௌத்தமயமாக்கல் : ஒரு கட்டமைப்பு அரசியல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் கலாசார அழிப்பு– ஒரு ஆழமான கட்டமைப்பு ஆய்வு (2026 நிலவரம்) அறிமுகம் : போருக்குப் பிந்தைய “புனரமைப்பு”யிலிருந்து கட்டமைப்பு சார்ந்த இன அழிப்புவரை 2009 ஆம் ஆண்டு ஆயுதப் போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்ததிலிருந்து, தமிழர்களின் தாயகமாக வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உண்மையான போருக்குப் பிந்தைய மீட்சி நிலைக்குள் நுழையவில்லை. மாறாக, அவை கணக்கிட்டு வடிவமைக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட ‘கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பு’ (Structural Genocide) என்ற நீண்டகால அரசியல் செயல்முறைக்குள் தள்ளப்பட்டுள்ளன. இந்த அழிப்பு முறை வெகுஜனக் கொலைகளைக் கொண்டதாக அல்ல. மாறாக, அது கீழ்க்காணும் வழிகளின் மூலம் மெதுவாகவும், ஆனால் உறுதியாகவும் செயல்படுகிறது: * தமிழர்களின் நில உரிமைகளை நிரந்தரமாகப்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்

சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஐம்பதாவது அகவையில் தடம் பதித்துள்ள 2026 ஆண்டு தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை அமைப்புக்குமிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். சுவிஸ் நாட்டில் BERN மாநகரில் நேற்றைய தினம் தேசத்தின் புதல்வி துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஒழுங்கமைப்பு செய்தவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை பொறுப்பாளராக சமீப காலத்தில் நியமிக்கப்பட்ட திரு .ரகுபதி அவர்கள் ஆவார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்டநிழற் படம் யாருமே எதிர்பாரத வகையில் அதிரடியாக திரையில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றி இருந்தார். தேசியத் தலைவர் அவர்களுக்கு துணையாகவும் பக்கபலமாகவும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு சேறு பூசுகின்றனர்: சிவமோகன் காட்டம்

தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு சேறு பூசுகின்றனர்: சிறிதரன் மீதான நடவடிக்கை குறித்து தமிழரசுக் கட்சியின் முன்னாள் எம்.பி சி.சிவமோகன் காட்டம்   திருட்டுத்தனமாக, அரசியல் அலங்கோலத்தனமாக, துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிறிதரன் எம்.பி மீதான நடவடிக்கை குறித்து முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனுக்கும், சிறிநேசனுக்கு எதிராக தமிழரசுகட்சி என்ற போர்வையில் அவிழ்த்துவிடப்படும் சேறு பூசல்கள் தொடர்பாக நாம் கவனம் எடுத்துள்ளோம். குறித்த இருவரும் அவர்களது மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று நேரடியாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக தமிழரசுக் கட்சி என்ற போர்வையில் ஊடக சேறு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

, டக்ளஸ் தேவானந்தா சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டிய ஒருவர்.சுகாஸ்

டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புடைய சாதாரண குற்றவாளி கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புடைய சாதாரண குற்றவாளி கிடையாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் கடுமையாக சாடியுள்ளார். அவர் அரச இயந்திரத்தோடு சேர்ந்து ஒட்டுக்குழுவாக இயங்கி, தமிழர்களுக்கு எதிரான பல நூற்றுக்கணக்கான கொலைகளுக்கும், கடத்தல்களுக்கும், காணாமலாக்கல்களுக்கும், வன்புணர்வுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய சிறீலங்காவின் ஆகப்பெரும் குற்றவாளிகளில்  முதன்மையானவர் என சட்டத்தரணி சுகாஸ் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா என்பவர் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தப்பட வேண்டிய ஒருவர். உள்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் கொலைகள் உட்பட குற்றங்களைச் சாவகாசமாகச் செய்த சர்வதேசக் குற்றவாளி! சூளைமேடு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒலுவில் மீனவர் துறைமுகம்,கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒலுவில் மீனவர் துறைமுகம், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நிகழ்ந்துள்ள கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,பணிப்புரை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலே ஜனாதிபதி இவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வையும் கலந்துகொண்டிருந்தார்.இங்கு கருத்து தெரிவித்த அவர்; ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் உறுதிக் காணிகளில் அமைந்திருந்த தென்னந்தோட்டங்கள் கடலுக்குள் சென்றுள்ளன. இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை வரை…

மேலும் படிக்க