சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்
சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஐம்பதாவது அகவையில் தடம் பதித்துள்ள 2026 ஆண்டு தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை அமைப்புக்குமிகவும் முக்கியமான காலப்பகுதியாகும்.
சுவிஸ் நாட்டில் BERN மாநகரில் நேற்றைய தினம் தேசத்தின் புதல்வி துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஒழுங்கமைப்பு செய்தவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை பொறுப்பாளராக சமீப காலத்தில் நியமிக்கப்பட்ட திரு .ரகுபதி அவர்கள் ஆவார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்டநிழற் படம் யாருமே எதிர்பாரத வகையில் அதிரடியாக திரையில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றி இருந்தார். தேசியத் தலைவர் அவர்களுக்கு துணையாகவும் பக்கபலமாகவும் நம்பிக்கைக்கு உரிய தளபதிகள் முன்னிலையில் காணொளியில் கலந்துரையாடலும் நடைபெற்றது .
நேற்றைய சந்திப்புகள் தொடர்பான தகவல்கள் பொது வெளியில் பதிவு செய்வதற்கான அனுமதியையும் தலைமை வழங்கி உள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்.
தேசியத் தலைவர் அவர்களது நிழல் படத்தை பார்வையிட்டோர் கண்களில் நீர் வழிய தங்களுடைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியிருந்தமையை கண்ணூடாக காண முடிந்தது .
10.01.2026 என்பது ஈழத்தமிழர் வரலாற்றில் மிகவும்முக்கிய காலப் பகுதியாக வரலாற்றில் நேற்றைய நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாக்காலுக்கு பின்னர் தலைவரின் இருப்பு செயற்பாட்டாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் முதல்முதலாக உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட
ள்ளது எனலாம் தேசியத் தலைவரையும் சூரியனையும் உங்கள் கரங்களால் மறைத்துவிட முடியாது என்ற உண்மையை மிக விரைவில் காலம் உணர்த்தும் .

