இலங்கை செய்தி. செய்திகள் 

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை சந்திரசேகர்

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய தினம் வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே இது என்றும் கூறினார். பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் சபையில் கருத்து வெளியிட்டதாகவும், அர்ச்சுனா எம்பி அதனை அவருக்குக் கூறியதாகவும் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இது தவறாகும். நான் அவ்வாறு கருத்து வெளியிடவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர. நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு 3,050 மெற்றிக் தொன் உப்பு

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு இலங்கைக்கு வரவுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றிரவு (21) நாட்டிற்கு 3,050 மெற்றிக் தொன் உப்பை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பும், தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பும் இதில் அடங்குவதாக அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் மாதாந்திர உப்புத் தேவை 15,000 மெற்றிக் தொன் என்பதுடன், ஆண்டுத் தேவை 180,000 மெட்ரிக் தொன் ஆகும். நாட்டின் உப்பு அறுவடை இரண்டு பருவங்களில் மேற்கொள்ளப்படுவதுடன், ஒருபோகுத்தின் அறுவடை பெப்ரவரி நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரையிலும், அடுத்த போகத்தின் அறுவடை ஜூன் நடுப்பகுதியிலிருந்து ஒக்டோபர் நடுப்பகுதி வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

சுமார் ரூ. 7 கோடிக்கும் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது

சுமார் ரூ. 7 கோடிக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவந்த விமான பயணிகள் 4 பேரை விமான நிலைய சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகநபர்கள் நேற்று (21) பிற்பகல் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.இந்தக் குழுவில் திருமணமான தம்பதியும் ஆண் மற்றும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவருகிறது. சந்தேகநபர் இந்த போதைப்பொருள் கப்பலை தாய்லாந்திலிருந்து கொள்வனவு செய்து, பின்னர் இந்தியாவின் பெங்களூருக்குப் பயணம் செய்து, அங்கிருந்து இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வணிகர்களுக்கான “Red Channel” வழித்தடம் ஊடாக போதைப்பொருளுடன் வெளியேற முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண் சந்தேகநபர் கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் எனவும், ஆண் சந்தேகநபர் கொழும்பு 15 பகுதியில் வசித்து வரும் வர்த்தகராவார்.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாடு முழுவதும் வீதி விபத்துகளில் 4 மாதங்களில் 965 பேர் பலி

இந்த ஆண்டு முழுவதும் பதிவான வீதி விபத்துகளில் மொத்தம் 965 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர். போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பேருந்து; 11 பேர் உயிரிழப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (11) அதிகாலை கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரண்டிஎல்ல பிரதேசத்தில் கதிர்காமத்திலிருநது குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று, வீதியை விட்டு விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஆரம்பத்தில் 5 ஆண்களும் 3 பெண்களும் மரணமடைந்த நிலையில், வைத்தியசாலையில் மேலும் 3 பேர் மரணமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். பேருந்து கவிழ்ந்ததில் அதற்குள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம்

  மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (11.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில், 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினாலும் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்,…

மேலும் படிக்க