இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை;

நாட்டின் நான்கு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நேற்று (02) இரவு 11.00 மணியளவில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் நோர்வுட் பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் தடுப்புச் சட்டத்தில் முன்வைக்கப் பட்டுள்ள புதிய திருத்தங்கள்

ஊழல் தடுப்புச் சட்டத்தில் அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய திருத்தங்கள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.ஊழல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கும், பிணை வழங்கும் நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்கும் இத்திருத்தங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல்கள் மூலம் பெறப்பட்ட சொத்துக்கள் அல்லது அவற்றை மாற்றியமைத்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு, குறித்த சொத்தின் பெறுமதியை விடக் குறையாத மூன்று மடங்கு தொகை மேலதிக அபராதமாக விதிக்கப்படும்.இதற்கு முன்னர், ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகளுக்கு குறையாத கடூழியச் சிறைத்தண்டனையும், ரூ.10 இலட்சம் அபராதமும் மட்டுமே விதிக்கப்பட்டது. புதிய திருத்தத்தின்படி, ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள முழுமையான நிதி இழப்பிற்குச் சமமான தொகையையும் மேலதிக அபராதமாக அறவிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிணை வழங்கும் நடைமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ரூ.1 இலட்சத்திற்குக்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மெட்ரோ தாழ்தள பேருந்துகளில் பயணிப்போருக்கு சிறப்பு சலுகைகள்

நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட தாழ்தள மெட்ரோ (Metro) பேருந்துகளில் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகளின் பதிவு நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலே,இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்ததாவது, இந்தப் பேருந்துகள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், இம்மாத இறுதிக்குள் அனைத்து 104 பேருந்துகளும் சேவையில் இணைக்கப்படும். இதற்கிடையில், மெட்ரோ நிறுவனம் வார இறுதியில் பயணிக்கும் பயணிகளுக்காக ரூ.799 பெறுமதியிலான சிறப்புச் சலுகைப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தப் பாதையிலும் எத்தனை தடவைகள் பயணம் செய்தாலும், ரூ.799 செலுத்துவதன் மூலம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

17 ஆண்டு கால விளக்கமறியலின் பின்னர் தமிழ் அரசியல் கைதி ஒருவருக்குப் பிணை

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்த உளவுத் தகவல்களை வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக எவ்வித இறுதித் தீர்ப்புமின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த செல்லையா பியூபாகரன் என்பவருக்கே நேற்று இவ்வாறு பிணை அனுமதிக்கப்பட்டது. எனினும், நீதிமன்றம் விதித்த கடுமையான பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குப் போதிய பிணையாளர்களோ அல்லது வசதிகளோ இல்லாத காரணத்தால், பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் மீண்டும் சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் மனித உரிமைகள் மற்றும் நீதித்துறைத் தாமதங்கள் குறித்து இந்தச் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே மீண்டும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இனி மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் வண்டி சென்றடைவதற்கு முன்னர் நோயாளிக்கு விரைவாக முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்குவதே இந்த புதிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுவசெரிய அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. இதற்காக விசேட பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயற்றிட்டமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து இந்த வருடம் முடிவடைவதற்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் – வர்த்தமானியில் வெளியான சட்டமூலம்

ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கான திருத்தச் சட்டமூலம் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் பல முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. குறித்த திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆவது இடம்!

இலங்கை உலகின் மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் ஒன்றாக சர்வதேச நிதியமைப்பினால் (IIF) அறிவிக்கப்பட்டுள்ளது.  2026 ஆம் ஆண்டிற்கான முதலீட்டாளர் தொடர்புகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை பற்றிய அறிக்கையின்படி இலங்கைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த அறிக்கையின் பிரகாரம், மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது. இதில் முதலிடத்தை வியட்நாமும், இரண்டாம் இடத்தை பெலிஸூம் (Beliz), மூன்றாம் இடத்தை மொசாம்பிக்கும் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டுத் தொடர்புகள் ஆகிய துறைகளில் இலங்கை தற்போது வேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகச் சர்வதேச நிதியமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடன் வெளிப்படைத்தன்மைக்கான குறிப்பிட்ட தரவரிசையில் இலங்கை 05 ஆம் இடம் வரை முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சொக்லேட் வடிவில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள் இலங்கை ப் பயணி கைது

தாய்லாந்திலிருந்து சுமார் 1 கிலோ 480 கிராம்    ‘குஷ்’   ரக போதைப்பொருளை சொக்லேட் பொதிகளில் மறைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கைப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று காலை  (27)  கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய  ஒருவரென என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் நேற்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-403 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார். அவரது பயணப் பொதியைச் சோதனை செய்தபோது, சுமார் 1 கிலோ 480 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.   அவை இயந்திரத்தின் மூலம் சொசேஜ் வடிவில் தயாரிக்கப்பட்டு, அதன் மீது சாக்லேட் பூசப்பட்டு, காற்று புகாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்தது. மேலும்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் நேற்று வரை டெங்கு மரணம் 61; 82,011 பேர் பாதிப்பு

நாட்டில் நேற்று வரை பதிவாகியுள்ள  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 82,011 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதென்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளதுடன் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் இந்த ஆண்டின்  நேற்றுவரையான காலப்பகுதியில் 17,395 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 16,294 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5639 பேரும், கண்டியில் 5634 பேரும், களுத்துறையில் 5355 பேரும் இரத்தினபுரியில் 4553 பேரும், காலியில் 4534 பேரும் பதிவாகியுள்ளனர். அந்த வகையில் ஜூலை மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 26,636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் மேலும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சாட்சியங்களின்றி தனிநபர் தாக்குதல் களை மட்டுமே எதிர்க்கட்சி முன்னெடுக்கிறது பிரதமர்

சட்டத்தின் ஆதிக்கத்தினை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதையே நாம் செய்துவருகின்றோம்.பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், மக்கள் ஆணைக்கு அமைவாகச் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, இலங்கையின் நீதித்துறை முறைமையின் மீதான கௌரவத்தையும் மக்களின் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான,நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதனையும் தகவல்கள் அல்லது சாட்சியங்கள் மூலம் நிரூபிப்பதற்கு அவர்கள் தவறிவிட்டனர் என்றும், அவர்களின் வாதங்கள்…

மேலும் படிக்க