இலங்கை செய்தி. செய்திகள் 

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக , புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது   திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது கரையோர பாதுகாப்பு சட்டங்களுக்கு முரணானது எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, போதிராஜ விகாரை என தெரிவிக்கப்படும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்ற முயன்ற போது, புத்த பிக்குகள் உள்ளிட்ட சிறு குழுவினரால் எதிர்ப்பு எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள திருமதி ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். திருமதி ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். அத்துடன், ‘டிட்வா’சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார். 2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற திருமதி ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கண்டி பிரதான வீதியின் இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!!

இரு பேருந்துகளும் டிப்பர் லொறியும் மோதி கோர விபத்து.!! கொழும்பு கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) இரண்டு பேருந்துகளும் டிப்பர் லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர் உயிரிழந்தார்.இந்த விபத்தில் லொறியில் பயணித்த மற்றொரு நபரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த சில பயணிகளும் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்லை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூண்டுலோயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்திலிருந்த பயணிகளே இவ்வாறு காயமடைந்துள்ளன..

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை வழங்கும் ஜூலி சங்

இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக விமானங்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்த விமானங்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்கு மாற்றப்படுகின்றதாகவும் டெக்சாஸில் தயாரிக்கப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த இந்த விமானங்கள் 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையை வந்தடையுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிட்வா சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் விமானங்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டி இந்த 10 விமானங்களும் விமானப்படையின் திறனை அதிகரிப்பதோடு, விமானிகளுக்கான பயிற்சிகளையும் மேம்படுத்த உதவுமென தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா இலங்கைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகாப்டர்களை இலவசமாக வழங்கவுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஒலுவில் மீனவர் துறைமுகம்,கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஒலுவில் மீனவர் துறைமுகம், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நிகழ்ந்துள்ள கடலரிப்பு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,பணிப்புரை வழங்கியுள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமையில் நடந்த பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலே ஜனாதிபதி இவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெவ்வையும் கலந்துகொண்டிருந்தார்.இங்கு கருத்து தெரிவித்த அவர்; ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதால் ஒலுவில், நிந்தவூர் பிரதேசங்களில் உறுதிக் காணிகளில் அமைந்திருந்த தென்னந்தோட்டங்கள் கடலுக்குள் சென்றுள்ளன. இக்காணிச் சொந்தக்காரர்களுக்கு இதுவரையும் எவ்விதமான நஷ்டஈடுகளும் வழங்கப்படவில்லை.வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் மருதமுனை வரை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது

ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது   வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய இச்சந்தேக நபரின் பயணப்பொதியில் 1.163 கிலோகிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், இவர் இலங்கை தனியார் நிறுவன விமானப் பணிப் பெண்ணென்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது அவரின் பயணப்பொதியில் தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான நடவடிக்கை.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை   பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள் மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்வதற்கான வசதி எதிர்வரும் மாதத்தில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். ஒரு பிரஜை தனது சொந்த மொழியைக் கேட்கும் போதும், சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப்படும் போதும், மற்றும் ஆள் அடையாளம் கவனத்தில் கொள்ளாது பாதுகாக்கப்படுவதை உணரும்போதும் அதனை செயல்பாடாக வெளிப்படுத்துவது தேசிய ஒருமைப்பாடாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஊழியர்கள் தமது கடமைகளை 2026 புத்தாண்டில் சம்பிரதாயமாக ஆரம்பிக்கும் வகையில் நேற்று (01) காலை அமைச்சின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2.35 மில்லியனுக்கும் அதிகமான யூரோ இலங்கைக்கு உதவி

இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இலங்கைக்கும் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC இனால் யூரோ 500,000 மற்றும் DG-European Civil Protection and Humanitarian Aid Operations (ECHO) பங்குதாரர்கள் WFP மற்றும் UNICEF இனால் யூரோ 1.85 மில்லியன் ஆகியவை அடங்கும். மேலும், Union Civil Protection Mechanism (UCPM) சேர்ந்த 37 நாடுகள், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், அல்பேனியா, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ஐஸ்லாந்து, மோல்டோவா, மோண்டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, நோர்வே, சேர்பியா, துருக்கி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

நிவாரண நிதியத்துக்கு ரூ. 3,421மில்லியன் இதுவரை நிதி உதவி.

நாட்டை கட்டியெழுப்பும் நிவாரண நிதியத்துக்கு ரூ. 3,421மில்லியன் இதுவரை நிதி உதவி வாரண நிதியத்துக்குஇதுவரை ரூ. 3,421 மில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த துறைகள் மற்றும் மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் பொருட்டு இந்த நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளதாவது; உள்ளூர் வர்த்தகத் தலைவர்கள்,வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த உதவிகளை வழங்கியுள்ளன. இதன்பிரகாரம் இந்நிதியத்துக்கு இதுவரை 3,421மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.இது 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.வெளிநாட்டு நாணயங்களாக 4.1 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.நாற்பது நாடுகளிலிருந்து நிதி உதவி பெறப்பட்டுள்ளதாகவும், அதில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க