இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சில நாடுகளில் நிராகரிக்கப்படும் புதிய இலங்கை கடவுச்சீட்டு? –

புதிய இலங்கை கடவுச்சீட்டின் தரம் காரணமாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். புதிய இலங்கை கடவுச்சீட்டுகளின் தரம் தொடர்பில் அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் விவாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த கடவுச்சீட்டை முறையாக ஸ்கேன் செய்து வாசிக்க முடியாததால், அது போலியான கடவுச்சீட்டாக இருக்கலாம் என பிரித்தானிய அதிகாரிகள் சந்தேகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடவுச்சீட்டுக்கான கட்டணம் 6,000 ரூபாயாக தொடரும் நிலையில், கடவுச்சீட்டின் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். புதிய கடவுச்சீட்டுகளில் அவதானிப்பு அல்லது நீட்டிப்பு பக்கங்கள் இல்லாததுடன், அச்சுத் தரமும் குறைவாக இருப்பதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், குடிவரவு முத்திரைகளின் மை மறுபக்கத்தில் கசிவது உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது.  நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது. இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு

அனைத்து தேர்தல்களையும் உரிய காலக்கட்டத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன்படி, மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து விளக்கமளிக்கும் நோக்கில், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுடன் நேற்று வியாழக்கிழமை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ”நாட்டில் நடைபெற வேண்டிய அனைத்து தேர்தல்களும் ஜனநாயக நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பிற்போடும் எந்தவொரு என்னமும் அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, உரிய சட்ட நடவடிக்கைகளின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த எதிர்பார்க்கிறோம் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு பாதிப்பு 88 ஆயிரத்தை கடந்தது – 63 பேர் உயிரிழப்பு

நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 88,000 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (05) நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 88,088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காய்ச்சல் காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மாத்திரம் 2,739 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் நுளம்பு பெருக்கம் ஏற்படும் இடங்களை அழித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாடு முழுவதும் 471 மருந்தகங்களில் விசேட சோதனை

நுகர்வோரின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் இதுவரை நாடு முழுவதும் 471 விசேட மருந்தக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது 109 மருந்தகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றில் 86 சட்டமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 362 மருந்தகங்களில் விசேட சோதனைகள் நடத்தப்பட்டிருந்தன. அண்மைய சோதனைகளையும் இணைத்துக் கொண்டதன் பின்னர், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விசேட மருந்தக சோதனைகளின் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது. இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் நீதிமன்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

டெங்கு ஒழிப்புக்கு இந்தியா வழங்கிய மலத்தியன் அமைச்சரிடம் ஒப்படைப்பு

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா 500 லீற்றர் மலத்தியன் பூச்சிகொல்லியை வழங்கியுள்ளது.சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (04) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்வு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இந்த நன்கொடை, இலங்கையின் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப ஆதரவாக அமைவதோடு, பொது சுகாதாரத் துறையில் இலங்கை மற்றும் இந்தியா இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் நெருக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகள் தற்போது பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்திைய உருவாக்கியிருப்பது விஞ்ஞான ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மாற்று பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்பத் தரமுடைய மலத்தியன், அதிக ஆபத்து நிலவும் பகுதிகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. தாயகச் செய்தி 

முல்லை, மன்னார் வைத்திய சாலைகளுக்கு CT, MRI ஸ்கேனர் இயந்திரங்கள். நளிந்த ஜயதிஸ்ஸ

வடக்கில் முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொது வைத்தியசாலைகளுக்கு சி.ரி, எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் இயந்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், வன்னிமாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.ரவிகரன் எம்.பி தமது கேள்வியின் போது; மன்னார் வைத்தியசாலைக்கு சி.ரி ஸ்கேனர் வசதிகள் ஏற்படுத்தப்படுமென ஏற்கனவே சுகாதார அமைச்சரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் சி,ரி ஸ்கேனர் வசதி இல்லாமல் நீண்டகாலமாக முல்லைத்தீவு மாவட்ட நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல நூற்றுக் கணக்கான நோயாளர்கள் சி.ரி ஸ்கேன் எடுப்பதற்காக வவுனியா உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சென்று வரவேண்டிய நிலையே காணப்படுகிறது.அந்த வகையில் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளுக்கும் சி.ரி ஸ்கேனர் வசதிகளை வழங்க வேண்டுமென,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கைக்கு வருகை

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தருகின்றார். கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான தீர்வுகள், பிராந்தியப் பாதுகாப்பு, உத்திசார் இணைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்புப் பொருளாதார உறவுகள் குறித்துக் கலந்துரையாடுவதே அவரின் இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாகவுள்ளது. தனது விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து அவர் விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளார். இந்தியாவின் ‘அண்டைய நாடுகளுக்கு முதலுரிமை’ கொள்கையின் அடிப்படையில், இலங்கையுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்த புதுடில்லி தீவிர கவனம் செலுத்தி வருகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கியமான அம்சமாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகத்தைப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை தீவிரம்: உயிரிழப்பு 7 ஆக உயர்வு;

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் – பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு வசித்து வந்த 47, 58 மற்றும் 83 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. வட்டவளை, ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கைக்கு குறுக்காக அமைந்துள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பேருந்தும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயம்

கேகாலை – கரடுபன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர் இன்று (03) காலை 6.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரம்புக்கனையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச. பேருந்தும், திகனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்துமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க