இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

ஜனாதிபதி மின்சார சபையின் பொறியி யலாளர் தொழிற் சங்கப் பிரதிநிதி களுக்கிடையி லான கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தச் செயல்முறையின் போது புதிய நிறுவனங்களுக்குள்ளும் உறுதிப்படுத்தப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மின்சார சபையாக இருக்கும் போதே தீர்க்கப்பட வேண்டிய, ஆனால் இதுவரை தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். இது ஒரு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரி பொருள் கையிருப்பை உறுதி டி.ஏ. ராஜகருணா

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பகுதியில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 – 15: முதலாவது கப்பலும் ஏப்ரல் 17 – 18: இரண்டாவது கப்பலும் ஏப்ரல் 21 – 22: மூன்றாவது கப்பலும் ஏப்ரல் 29 – 30: நான்காவது கப்பலும் நாட்டுக்கு வந்தடையவுள்ளது. குறித்த எரிபொருள் கையிருப்புகள் அனைத்தும், கப்பல்களில் இருந்து எரிபொருள் இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்ப கொள்வனவு செய்யப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டமிடப்பட்ட இறக்குமதிகள் மூலம் பண்டிகைக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக் க்ஷவுக்கு அழைப்பு

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் (17) செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு முன்னெடுக்கும்விசாரணையில் சாட்சியமளிப்பதற்காக இந்த அழைப்பு அவருக்கு விடுக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னரும் பெப்ரவரில் 12 ஆம் திகதி ஆஜராகுமாறு இவ்வாறான அழைப்பு விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், தாம்,சிங்கப்பூரிலிருப்பதாக கோட்டாபய எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.இதையடுத்தே இம்மாதம் 17 ஆம் திகதி ஆஜராகும்படி அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மேலதிக உதவிகள் தேவைப்படும் பயணிகள் இலங்கைக்குள் 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும், சர்வதேச ரீதியாக +94 11 777 1979 என்ற இலக்கத்தின் ஊடாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் கைது

இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு, தோட்டாக்கள் என்பவற்றினை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். அரச புலனாய்வு துறை அதிகாரிகளினால் கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாம் அதிகாரிகளினால்நேற்று (10) ஹிங்குரன்கொட பொலிஸ் பிரிவின் கிம்புலாவள பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இராணுவ சீருடை மற்றும் கைக்குண்டு,தோட்டாக்களை அதிரடிப்படையினர் செய்யப்பட்டவர் 46 வயதுடைய ஹிங்குரன்கொட,கிம்புலாவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் இராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் பொலிஸ் அதிரடிப்படையினர் சந்தேகநபரை ஹிங்குரன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஹிங்குரன்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் அதிகாரி எல்லேபொள தலைமையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் ஹிங்குரன்கொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார சபை தொழிற் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை களுக்கு இணக்கம் தலைவர் நுசித் குமாரதுங்க

மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். எஞ்சிய இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் பெரும்பாலானவை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதே சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இதில் 59 கோரிக்கைகளுக்கு முதற்கட்டக் கலந்துரையாடலின் போதே பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்திருந்தது. அதன் பின்னர் 5 கோரிக்கைகள் எஞ்சியிருந்ததுடன், அவை குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டது. இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார ஆறுதல் செய்தி.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்து, உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒரு முக்கியமான ஆறுதல் செய்தியை வழங்கியுள்ளார். கொழும்பில் நேற்று  நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச ரீதியாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் நிலவினாலும், இலங்கை அரசு முன்நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தடையின்றி எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கையிருப்பு இலங்கையிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், தட்டுப்பாடின்றி விநியோகத்தைப் பேணுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும், தற்போதைய சர்வதேச பதற்ற நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.”நாட்டின் வளங்களை நாம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மின்சார ஊழியர் களுக்குக் கடும் எச்சரிக்கை பணிக்கு வராதோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய நிறுவனங்களின் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சில ஊழியர்கள் பணிக்குச் சமூகமளிக்காமல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையை முதன்மை நிறைவேற்று அதிகாரிகளான பொறியியலாளர் எஸ்.ஐ. குமார மற்றும் பொறியியலாளர் என்.எஸ். வெத்தசிங்க ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர். புதிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்ற போதிலும், அதன் மூலம் ஊழியர்கள் தமது உடனடிக் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள் என முகாமைத்துவம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவைப் புறக்கணிப்பவர்களுக்கு எதிராக, அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் கடும் ஒழுக்காற்று மற்றும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஊவா பரணகம பாரிய சட்டவிரோத மது உற்பத்தி, விற்பனை நிலையம் முற்றுகை

ஊவா பரணகம பிரதேச தோட்ட மக்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்த 08 நபர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களிடமிருந்து 750 லீற்றர் கோடா,190 லீற்றர் கரும்புப் பாணி ஆகிய உற்பத்தி மூலப்பொருட்கள் மற்றும் 25 லீற்றர் கசிப்பையும் மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஊவா பரணகம பொலிஸாருக்குக் பொது மக்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அப்பிரதேசத்திற்குட்பட்ட வோல்டிமார், கீரியகொல்ல மற்றும் தும்பவத்தை பகுதிகளில் உள்ள தோட்ட மக்களை குறிவைத்து நீண்ட காலமாக செயல்பட்டு வந்த பாரிய அளவிலான சட்ட விரோத மதுபான (கசிப்பு) நிலையமொன்றை நேற்று முன்தினம் (09) சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது ஊவா பரணகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.எம். அபேசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இந்நடவடிக்கையின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் புதிய செயலாளராக குணதாச சமரசிங்க நியமிக்கப்பட்டார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான குணதாச சமரசிங்க, இந்தப் பதவிக்கு நியமிக்கப்படும்போது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

மேலும் படிக்க