அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லை இளையோ ரின் விளையாட்டு திறனை மேம்படு த்தும் நோக்கில் பூப்பந் தாட்ட பயிற்சி முகாம்

முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி   முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் 13 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளையோருக்கான பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி நிகழ்வு நேற்றையதினம் 07.03.2026 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறை பூப்பந்தாட்ட சங்கம் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் இணைந்து, தமிழர் புலம்பெயர் பூப்பந்தாட்ட அமைப்பான UBF அமைப்பின் நிதி அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இளையோரின் பூப்பந்தாட்ட விளையாட்டு திறனை வளர்த்தெடுத்து எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சுமார் 60 இளையோர் கலந்து கொண்டு பயிற்சியிலும் போட்டியிலும் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்வின் ஆரம்ப…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வெற்றிலைக்கேணி பகுதியில் பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் அதிகளவான பனைமரத்தை கடத்த முற்பட்ட மூவர் மருதங்கேணி  காவல் துறையினரால்.நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் பனைமரங்கள் அழிக்கப்பட்டு வெளி இடங்களுக்கு பனைமரங்கள் அதிகளவாக கடத்தப்படுவதாக மருதங்கேணி காவல் துறைக்கு அதிகளவான முறைப்பாடு கிடைத்திருந்தது. இதனடிப்படையில் விசாரணையை மேற்கொண்டிருந்த காவல் துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று (7) இரவு குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டது.  குறித்த சுற்றிவளைப்பில் அனுமதிபத்திரம் இன்றி கடத்துவதற்காக மறைத்துவைக்கப்பட்ட பனை மரங்களை கண்டறிந்ததுடன் அதனுடன் தொடர்புடைய மூவரை மருதங்கேணி  காவல் துறையினர். கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ்- தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பத்தில் விருந்தினர்கள் மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு, அணிநடையுடன் போட்டி ஆரம்பமானது. தொடர்ந்து சுவட்டு நிகழ்வுகள், இடைவேளை நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன. கல்லூரியின் முதல்வர் ரி.வரதன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவனான வைத்தியர் ரி.நந்தகுமார் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள் – ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகு விபத்து: அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் நடந்த படகு விபத்தின் முழுமையான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக கடற்படையினரும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதற்கான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி செய்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விடுதலைப்போராட்ட காலத்தில் அவசர கால விதிமுறைக்குள்ளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அத்தகைய அவசரகாலநிலை தற்போது மீண்டும் இந்தநாட்டில் அறிமுகப்படுத்தப்படும்போது, தமது உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள் இந்த அவசரகால நிலையையும் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். எனவே சட்ட ஏற்பாட்டுடனான மக்கள் மயப்பட்ட நடவடிக்கைகள், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்கள் மற்றும் அவர்களின் இயல்பு வாழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை ஒழுங்குவிதிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேச விடுதலைக்காக தன்னை அற்பணித்துச் சேவையாற்றிய மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 06.03.2026 இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறது. இந்நிகழ்வில்தலைமை அலுவலகம் த.தே.ம.முன்னணி சபாபதி வீதி கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா!

 கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா! அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்!

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்! ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம்.பளீல் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, நேற்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’-‘அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஈரானியப் போர் கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப் பேற்றுள்ளது.

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “இந்தக் கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வராமல், திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு தரித்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் முதலில் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” – என்றும்  ஜனாதிபதி திட்டவட்டமாகத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க