செய்திகள் தாயகச் செய்தி 

அநுர கூட்டத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்படும் மக்கள்: சு.நிசாந்தன்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிகழ்வுகளுக்கு  யாழ் அரச பேருந்துகள் மற்றும் அரச அதிகாரிகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக மக்கள் அழைத்துச் செல்லப்படுவதாகத் தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளர் சு.நிசாந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அந்த பேருந்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார். கிராம சேவகர் கூட இன்றைய நிகழ்வுக்கு மக்களை திரட்டி ஏற்றிச்சென்றார் என்றும் தகவல் வந்துள்ளது. அதைவிட பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களும் அழுத்தத்தின் மத்தியில் ஜனாதிபதியின் நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் சேவைகளை பெறுவதற்கு சென்ற மக்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த போது என்ன செய்தார்களோ…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

நாட்டில்,2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோல்ட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.Hayleys Fentons Limited நிறுவனம் இத்திட்டத்தை நிர்மாணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மன்னாரின் இயற்கை காற்று சக்தியைப் பயன்படுத்தி, 10 காற்றாலை விசையாழிகளைக் கொண்ட இந்த அதிநவீன காற்றாலை, ஆண்டுக்கு 207,000,000 கிலோ வோட் மணிநேர மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.ஒரு அலகு மின்சாரம் 0.0465 அமெரிக்க டொலர் அல்லது 14.37 இலங்கை ரூபாவிற்கு வழங்கப்படவுள்ள இத்திட்டத்தை மார்ச் 2027 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு நவீன கல்வி வசதிகளுடன் கூடிய முழுமையான ஸ்மார்ட் வகுப்பறையை வழங்கும் ஆவணங்களை கையளித்தல்,தேசிய நீர் வழங்கல் சபையுடன்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நீர்கொழும்பு கடற்பரப்பில் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலை

நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் அறுநூற்று இருபத்தொரு (621) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான கப்பலொன்று நீர்கொழும்பு கடற்பரப்பில் நடாத்திய சுற்றிவளைப்பி்ன்போதே கடற்பரப்பில் கைவிடப்பட்ட பதினாறு (16) பொதிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் .ஜனாதிபதி

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்றும் கூட, சிலர் தொல்பொருள் நினைவுச்சின்னங்கள் அல்லது மதத் தளங்களை மையமாகக் கொண்டு, ஆங்காங்கே இன மோதல்களைத் தூண்ட முயற்சித்தாலும், வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது வேறு எந்த இடத்திலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களின் வீட்டுப் பிரச்சினையும் தனது பதவிக் காலத்தில் தீர்க்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று (16) முற்பகல் சாவகச்சேரி, மீசாலை, வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,500 வீடுகளை நிர்மாணித்தல் உட்பட நாடு முழுவதும் 31,218 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் “தமெக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேரூந்துகள்-பயணிகள் அவதி

ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட பேரூந்துகள்-பயணிகள் அவதி இன்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன் படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்த பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கேவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராச்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள்

தரையில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் காலத்தில் கொள்ளையர்கள் நேரடியாக கடல் மற்றும் ஆற்றில் அகழ ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழர் பிரதேசமான திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே ஐந்து டிங்கி படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது படகில் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

புதிய ஆர்க்டிக் பனிப்போரின் மையப்புள்ளியாக கிரீன்லாந்து .

புதிய ஆர்க்டிக் பனிப்போரின் மையப்புள்ளியாக கிரீன்லாந்து ⧉════════❁════════⧉ இறையாண்மை, நேட்டோ ஒற்றுமை மற்றும் ஏகாதிபத்திய அதிகார அரசியலின் மீள்வருகை ✦. கிரீன்லாந்தின் குரல்: “நாங்கள் விற்பனைக்கு அல்ல” உலக அரசியலின் ஓரங்கட்டப்பட்ட நிலப்பரப்பாக நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டிருந்த கிரீன்லாந்து, இன்று உலக அதிகார அரசியலின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதி மீதான போட்டி தீவிரமடையும் நிலையில், கிரீன்லாந்து இனி ஒரு பனித்தீவு அல்ல; அது உலக வல்லரசுகளின் மூலோபாய கணக்குகளில் மைய இடம் பிடித்துள்ள அரசியல் நிலப்பரப்பாக மாறியுள்ளது. இறையாண்மையை உறுதியாக நிலைநாட்டும் ஒரு அரிய மற்றும் தெளிவான அரசியல் நடவடிக்கையாக, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஆகியோருடன் இணைந்து, கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மீண்டும் எழுந்த ஆர்வத்தைத் திட்டவட்டமாக நிராகரித்தார். வாஷிங்டனில் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பிற்கு முன்னதாக…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் நாவற்குழி பகுதியில் வாகனம் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்து ள்ளனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா தற்காலிகமாக நிறுத்தம்.அமெரிக்க

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடைமுறைகள் திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வீசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பத்து மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது. பிரதான வீதியில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடத்திய நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது போக்குவரத்து காவல்துறையினர் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், காவல்துறையினர் இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கியதுடன், அவர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள்…

மேலும் படிக்க