கடலரிப்புகளின் ஆபத்திலிருந்து அம்பாறை கரையோரங்களை பாதுகாக்க அரசுக்கு மகஜர்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவும் தீவிர கடலரிப்பு தொடர்பான பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அவற்றுக்கு நிரந்தரத் தீர்வைப் பெறுவதற்கும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசாங்கத்திடம் கூட்டு மகஜர் ஒன்றை சமர்ப்பிப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பொத்துவில்.ஆக்கிய பகுதிகள் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன மாளிகைக்காடு மையவாடிப் பகுதியில் கடலரிப்பு தீவிரமடைந்ததில், அங்குள்ள ஜனாஸாக்களின் (உடல்கள்) எச்சங்கள் வெளியே தெரியும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடலரிப்பு நிலவரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுர…
மேலும் படிக்க