உலக அரசியல். கட்டுரை 

பால்டிக் இராணுவமயமாக்கல் • ஐரோப்பிய ஒன்றிய விரிசல்கள் • மாறிவரும் உலக ஒழுங்கு

புதிய ஐரோப்பியப் பிளவு: பால்டிக் இராணுவமயமாக்கல் • ஐரோப்பிய ஒன்றிய விரிசல்கள் • மாறிவரும் உலக ஒழுங்கு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ பால்டிக் பதற்றங்கள் • ஆர்க்டிக் மூலோபாயக் கணக்கீடுகள் • ஐரோப்பிய ஒன்றியப் பிரிவினைகள் • பனிப்போருக்குப் பிந்தைய மாயையின் முடிவு ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ✦. கோட்லாந்து: பால்டிக் கடலின் “மூழ்கடிக்க முடியாத விமானத் தளம்” ரஷ்யாவின் கடுமையாக இராணுவமயமாக்கப்பட்ட கலினின்கிராட் பகுதியிலிருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்வீடனின் கோட்லாந்து தீவு, இன்று வட ஐரோப்பிய பாதுகாப்பு சமநிலையின் மையமாக உருவெடுத்துள்ளது. ஒருகாலத்தில் அமைதியான கடற்கரைப் புறக்காவல் நிலையமாக இருந்த இந்தத் தீவு, தற்போது நேட்டோவின் வடக்கு பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஏன் கோட்லாந்து…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்துக; பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் வலியுறுத்து

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்துக; முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சிலகிராமங்களில் சட்டவிரோதமான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக மக்களால் தமக்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இவ்வாறான கசிப்பு உற்பத்திச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தம்மால் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்ட்சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் உதன்போது உறுதியளித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், முல்லைத்தீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கிடையில் 11.02.2025நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி;

கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு – அமைச்சர் விமல் ரத்நாயக்க பதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் – புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் 11.02.2026நேற்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடலம் நவாலி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அக்கரைவெளி வரையான வீதியைச் சீரமைக்க 65மில்லியன் நிதி ஒதுக்கீடு. விமல் ரத்நாயக்க

அக்கரைவெளி வரையான வீதியைச் சீரமைக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 65மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார் – விமல் ரத்நாயக்க முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகளும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமமான தென்னமரவடியைச்சேர்ந்த விவசாயிகளும் தமது விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் கோட்டைக்கேணி தொடக்கம், அக்கரைவெளி வரையிலான 16கிலோமீற்றர் வீதியும் அதனோடிணைந்த இரண்டு பாலங்களும் சீரின்றிக்காணப்படுவதால் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வீதியையும், அதனோடிணைந்த பாலங்களையும் சீரமைத்துத் தருமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த வீதியில் அமைந்துள்ள அக்கரைவெளி பாலத்தை நிர்மாணிப்பதற்கு 65மில்லியன் ரூபாயினை தாம் ஒதுக்கீடுசெய்வதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையானது திங்கட்கிழமை(9) இரவு கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் முன்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டது. இத் திடீர் சோதனை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

கிவுல் ஓயா திட்டத்தில் குடியேற்றங்கள் நிறுவப்படாது

வெளிமாவட்டங்களிலிருந்து புதிய குடியேற்றங்களை அமைக்கும் திட்டம் கிவுல் ஓயா திட்டத்தில் இல்லையென்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவரென்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ , மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.துரதிஷ்டவசமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்நகர்த்த முடியாதிருந்தது.கொழும்பிலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வதாலேயே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் எழுந்துள்ளன. நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி 1983ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மக்கள் மத்தியில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம் சத்தியலிங்கம் எம்.பி

கிவுல் ஓயா திட்டத்தை மீளாய்வு செய்யுங்கள்; இல்லையேல் நடைமுறைப்படுத்த இடமளியோம் – மணலாறில் சத்தியலிங்கம் எம்.பி இறுக்கமாக தெரிவிப்பு…! கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று இன்றைய தினம் (09.02.2025) மணலாறு பகுதியில் உள்ள மகாவலி அதிகாரசபையின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வவுனியா முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்த கூட்டத்திற்காக திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேசங்களை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டாலும், தமிழ் பகுதிகளை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள், கமக்காரர் அமைப்புக்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கூட்டத்தின்போது பாராளுமன்ற…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

மத்திய கிழக்கு: ஒரு கத்தியின் முனையில் ஈரான் – அமெரிக்கா – இராஜதந்திரம்: போரின் ஆபத்தான சங்கமம்

மத்திய கிழக்கு: ஒரு கத்தியின் முனையில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ஈரான் – அமெரிக்கா – இராஜதந்திரம்: போரின் ஆபத்தான சங்கமம் மத்திய கிழக்கு மீண்டும் ஒரு மூலோபாயத் திருப்புமுனையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் முன்னெடுக்கப்பட்ட மறைமுக இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், தற்போது நேரடி மோதலாக வெடிக்கும் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளன. போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் குடிமக்கள் வெளியேற்ற உத்தரவுகளின் நிழலில் இந்தப் பேச்சுவார்த்தைகள் தள்ளாடுகின்றன. வாஷிங்டன் மீது தெஹ்ரானின் கடும் அதிருப்தி “போர்க் கப்பல்களின் நிழலில் இராஜதந்திரம் சுவாசிக்க முடியாது” ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெஹ்ரானின் இதுவரையிலான மிகத் தெளிவான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்: மிரட்டலும் இராஜதந்திரமும் ஒன்றாகப் பயணிக்க முடியாது. மஸ்கட்டில் நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் “நேர்மையை” அவர் வெளிப்படையாகக் கேள்விக்குள்ளாக்கினார். இதற்குக் காரணமாக அவர் சுட்டிக்காட்டிய…

மேலும் படிக்க