கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் இறுதிக் கலந்துரையாடல்!
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரச அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக…
மேலும் படிக்க