நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை
நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் உத்தியோகபூர்வ முன்மொழிவொன்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் நன்மைகளை தடுப்பது இதன் நோக்கம் அல்லவென்பதுடன், சிறுவர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இம்முன்மொழிவு கையளிக்கப்பட்டமைக்கான நோக்கமென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்க இதற்கான சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதுடன், அதற்கான கால அவகாசம் தொடர்பிலும் தெரிவித்தார். இந்தத் தடையை நடைமுறைப்படுத்த நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், ஆரம்பகால சிறுவர் அபிவிருத்திக்கான தேசிய செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஆலோசனை அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது…
மேலும் படிக்க