கட்டுரை மருத்துவ குறிப்பு 

அவசர சுகாதார எச்சரிக்கை: ஐக்கிய இராச்சியத்தில் நோரோவைரஸ் தொற்றுகள் தீவிரமாக உயர்வு

அவசர சுகாதார எச்சரிக்கை: ஐக்கிய இராச்சியத்தில் நோரோவைரஸ் தொற்றுகள் தீவிரமாக உயர்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ 2026 பிப்ரவரி: குளிர்காலத்தில் உருவான கடுமையான பொது சுகாதார அபாயம் ஐக்கிய இராச்சியம் தற்போது நோரோவைரஸ் (Norovirus) தொற்றுகளின் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான அதிகரிப்பை எதிர்கொண்டு வருகிறது. National Health Service (NHS) மற்றும் UK Health Security Agency (UKHSA) ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ள சமீபத்திய கண்காணிப்பு அறிக்கைகள், இந்த வைரஸ் வழக்கமான பருவ சராசரிகளை விட மிக அதிகமாக பரவி வருவதை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் மிக அதிக ஆபத்தில் உள்ளனர். ✹. பரவலின் அளவு: கண்காணிப்பு தரவுகள் என்ன கூறுகின்றன? UKHSA வெளியிட்ட சமீபத்திய கண்காணிப்பு தரவுகள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன: * அதே காலகட்டத்தின் 5 பருவ…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சீறீதரன் எம்பியின் பதவி நீக்கம்; கட்சிக்குள் எதிர்ப்பு!

சீறீதரன் எம்பியின் பதவி நீக்கம்; கட்சிக்குள் எதிர்ப்பு! இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிறீதரன் எம். பி.யை நீக்கும் முடிவு கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறீநேசன் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டு. ஊடக அமையத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசமைப்பு பேரவையில் இராணுவ அதிகாரி ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க சிறீதரன் எம். பி. ஆதரவளித்தார் என்று கூறப்படும் விவகாரம் சர்ச்சையானது.இதையடுத்து, அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், சிறீதரன் பதவி விலகாது விடின் அவர் விலகும்வரை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அவரை கட்சி நீக்கும் என்று அரசியல்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை.புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில்14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மக்களால் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்ட நிலையயில் முல்லைத்தீவு விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று(02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியிலிருந்து ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் நேற்றைய தினம் (02) புதுக்குடியிருப்பு திப்பிலி பகுதியில் 14 கிராம் ஐஸ் உடன் ஐந்து பேரும் வெகனார் வாகனம் ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் களும் கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம்ஒப்படைக்கப்பட்டனர் இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு காவல்துறையினர் இவர்களை இன்று(03) முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அங்கு புதுக்குடியிருப்பு காவல் நிலைய அதிகாரி தி.ஜனன் கு‌றி‌த்த நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது எனவும் இவர்களை காவ‌லி‌ல்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை; பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 04.02.2026நாளையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே.இயக்குநர் வ.கௌதமன்!

இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமற்ற கறுப்பு தினமே – தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன்! இலங்கையின் சுதந்திர தினம் என்பது கலப்படமட்ட ஒரு கறுப்பு தினம் எனவும், சுதந்திர தினத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கறுப்பு தின போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவுனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிக்க ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுதந்திரம் பெற்ற இலங்கை தேசம் வேண்டும் என்ற அடிப்படையில் உறுதியாகவும், உக்கிரமாகவும் போராடிய பங்கு தமிழர்களுக்கும் உண்டு. இந்திய ஒன்றியத்திலும், இலங்கையிலும் தமிழ் தலைவர்களின் போராட்டமும் சுதந்திரத்துக்கு காரணமாக அமைந்தது. அந்தவகையில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பொன்.அருணாசலம், பொன்.இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், ஈ.எம்.வி.நாகநாதன்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் சிறிதரன்

போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காத நிலையில் நாளைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.பல்கலைக்கழக மாணவர்கள் நாளையதினம் முன்னெடுக்கும் போராட்டமானது மிகவும் பெறுமதியானயானது.நாம் இனப்படுகொலை செய்யப்பட்ட இனம் எமக்கு இந்த நாட்டில் சமஷ்டி முறையிலாக தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகள் 07 ஆண்டுகளைத் தாண்டியும் தீர்க்கப்படவில்லை.எனவே சுதந்திர தினத்தன்று இடம்பெறும் கரிநாளுக்கு வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை.மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட  விசேட  செய்தியிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “முழுமையான சுதந்திரத்தை அடைய சட்டத்தின் ஆட்சி இன்றியமையாதது.  சட்டத்தை  சமமாகவும் நீதியுடனும் கடைப்பிடிக்கும்  சமூகமே  உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையை அவதானிக்கும்போது  பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் பண்பாட்டுத் துறைகளில் இலங்கை பெரிதளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாக கூற முடியாது.  உண்மையான சுதந்திரமென்பது வெறும் அரசியல் சுயாட்சி மட்டுமல்ல. அது நீதியும் சமத்துவமும் பொறுப்புணர்வும் நிலவும் சமூக அமைப்பை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது.

மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது. ============================================ மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதி, நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது ஆமை இறைச்சி ஆமை முட்டைகளுடன் ன் மூன்று (03) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதோடு, அவர்களிடமிருந்து படகு ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். மன்னார் நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வடமத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சட்டவிரோத விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 17 கிலோ ஆமை இறைச்சி மற்றும் 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஹார்முஸ் நெருப்புப் புள்ளி ஈரான் – அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய மோதல்:

ஹார்முஸ் நெருப்புப் புள்ளி (HORMUZ FLASHPOINT) ஈரான் – அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றிய மோதல்: மத்திய கிழக்கை ஒரு பிராந்தியப் போரின் விளிம்புக்கு தள்ளுகிறது ⧉════════❁════════⧉ “இந்த முறை இது ஒரு பிராந்தியப் போராக அமையும்” – காமேனியின் எச்சரிக்கை ஈரானின் உயரிய தலைவர் அயத்துல்லா அலி காமேனி, அமெரிக்காவை நோக்கி இதுவரை இல்லாத அளவில் மிக நேரடியானதும் ஆபத்தானதும் ஆன எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவால் தொடங்கப்படும் எந்தவொரு ராணுவ நடவடிக்கையும் ஒரு வரையறுக்கப்பட்ட மோதலாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். “அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராகவே மாறும்.” தேசிய அரசுத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், இந்த மோதலை வெறும் ராணுவச் சம்பவமாக மட்டும் பார்க்காமல், மேற்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான வரலாற்றுப் போராட்டமாக காமேனி சித்தரித்தார். ஈரானின்…

மேலும் படிக்க