உலக அரசியல். கட்டுரை 

புவிசார் அரசியல் அதிர்வுகள் 2026: அதிகாரம், எரிசக்தி மற்றும் போர்முறையின் மகா மறுசீரமைப்பு

புவிசார் அரசியல் அதிர்வுகள் 2026: அதிகாரம், எரிசக்தி மற்றும் போர்முறையின் மகா மறுசீரமைப்பு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ༒──────────────────༒ ✦. ட்ரோன் போர்முறைப் புரட்சி: நேட்டோவின் வான் பாதுகாப்புக் கோட்பாட்டைச் சோதிக்கும் ரஷ்யா நவீன போர்முறை இன்று ஒரு அடிப்படை கட்டமைப்பு மாற்றத்திற்குள் நுழைந்துள்ளது. ரஷ்யாவின் மலிவு விலை, தொழில்துறை அளவில் தயாரிக்கப்படும் ட்ரோன்களின் பரவலான பயன்பாடு, நேட்டோவின் வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பொருளாதார மற்றும் மூலோபாய சமநிலையின்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மாஸ்கோவின் அணுகுமுறை எளிமையானதாக இருந்தாலும், அதன் விளைவுகள் ஆழமானவை: * நுரை மற்றும் ஒட்டுப்பலகை போன்ற எளிய பொருட்களால் தயாரிக்கப்படும் ஆயிரக்கணக்கான மலிவு ட்ரோன்களைப் பயன்படுத்துதல். * அதற்கு பதிலாக நேட்டோ அதிக…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்; ரவிகரன்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்; ரவிகரன் எம்.பி வலியுறுத்து வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இம்முறை வெடுக்குநாறி மலையில் சைவமக்கள் சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்குரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படுமென வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் உபாலி சமரசிங்கவால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ்.மாசாரில் 105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்பு

மாசாரில் 105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்பு! பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசார் பகுதியில்  105 லட்சம்  ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (12) பளை பொலிஸாருடன் மாசார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்போது சுமார் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான 14 கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ரவிகரன் எம்.பியிடம் முறையீடு

முறிப்பில் நெற்கொள்வனவை ஆரம்பித்த நெல் சந்தைப்படுத்தல் சபை; களஞ்சியசாலைகள் இன்மையால் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பியிடம் முறையீடு முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபையினர் விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவுச் செயற்பாடுகளை நேரடியாகப்பார்வையிட்டு நிலமைகளைக் கேட்டறிந்துகொண்டார். இந்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு விவசாயியிடமிருந்து 14வீத ஈரப்பதன் உடைய 2500கிலோக்கிரம் நெல் கொள்வனவுசெய்யப்பட்டுவருவதாக இதன்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார். அத்தோடு முறிப்பிலுள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்களஞ்சியசாலையில் மாத்திரமே நெல்லை கொள்வனவுசெய்து சேகரித்து வைப்பதற்கான இடவசதிகள் இருப்பதாகவும், ஏனைய களஞ்சியசாலைகளில் இடவசதிகள் இன்மையால் நெற்கொள்வனவை மேற்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் முற்றுகையிட்டு போராட்டம்

யாழ். மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிரேரணையை எதிர்த்து மாநகர சபையை  முற்றுகையிட்டு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் இன்றையதினம் (13) குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அத்துடன் மாநகர சபை உறுப்பினர் தர்சானந், ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயநினைவற்றவர் என்று யாழ். நகர பழக்கடை உரிமையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்ளனர். இங்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், “நாம் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மாநகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி

மீண்டும் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15ஆம் திகதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியொன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வழமைக்கு திரும்பிய கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமை போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததன் காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க