செய்திகள் தாயகச் செய்தி 

அக்கரைவெளி வரையான வீதியைச் சீரமைக்க 65மில்லியன் நிதி ஒதுக்கீடு. விமல் ரத்நாயக்க

அக்கரைவெளி வரையான வீதியைச் சீரமைக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 65மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்தார் – விமல் ரத்நாயக்க முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகளும், திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமமான தென்னமரவடியைச்சேர்ந்த விவசாயிகளும் தமது விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குப் பயன்படுத்தும் கோட்டைக்கேணி தொடக்கம், அக்கரைவெளி வரையிலான 16கிலோமீற்றர் வீதியும் அதனோடிணைந்த இரண்டு பாலங்களும் சீரின்றிக்காணப்படுவதால் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த வீதியையும், அதனோடிணைந்த பாலங்களையும் சீரமைத்துத் தருமாறு அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த வீதியில் அமைந்துள்ள அக்கரைவெளி பாலத்தை நிர்மாணிப்பதற்கு 65மில்லியன் ரூபாயினை தாம் ஒதுக்கீடுசெய்வதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

கல்முனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-50 க்கும் மேற்பட்டோருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு சட்டவிரோத போதைப்பொடு;கள் கடத்தல்கள் மற்றும் சட்டத்தை நிலைநாட்டும் முகமாகவும் கிளின் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் பொலிஸாரின் விசேட திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சோதனை நடவடிக்கையானது திங்கட்கிழமை(9) இரவு கல்முனை பிரதான பேரூந்து நிலையத்தின் முன்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டது. இத் திடீர் சோதனை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

கிவுல் ஓயா திட்டத்தில் குடியேற்றங்கள் நிறுவப்படாது

வெளிமாவட்டங்களிலிருந்து புதிய குடியேற்றங்களை அமைக்கும் திட்டம் கிவுல் ஓயா திட்டத்தில் இல்லையென்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படுவரென்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டிலே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; கிவுல் ஓயாத் திட்டம் 2007ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2011ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவிருந்தது.கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்க்ஷ , மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்க்ஷ ஆகிய அனைவரும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.துரதிஷ்டவசமாக இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முறையாகக் காணப்படவில்லை. இதனால் இத்திட்டத்தை முன்நகர்த்த முடியாதிருந்தது.கொழும்பிலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படு வதாலேயே, தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு அச்சங்கள் எழுந்துள்ளன. நீர்பாசனத் திட்டங்களைப் பயன்படுத்தி 1983ஆம் ஆண்டிலிருந்து குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மக்கள் மத்தியில்…

மேலும் படிக்க