செய்திகள் தாயகச் செய்தி 

கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார்,யாழ்பல்கலைக் கழகத்துக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார், நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர்,நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்தும் கலந்துரையாடினார். இச்சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

மக்களின் நலன்களில் கவனம் செலுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், நாடு என்ற வகையில் அடையப்படும் அனைத்து பொருளாதார நன்மைகளும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செல்வதை உறுதி செய்வதற்காகவே அரசாங்கம் இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் மாத்தளை மாவட்ட ஆரம்ப நிகழ்வு, நேற்று (27) பிற்பகல் மாத்தளை, கவடயாமுன புராண ரஜமஹா விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், சமூகத்தில் இழந்து வரும் அனைத்து தார்மீகப் பண்புகளையும் மீண்டும் கொண்டுவருவதற்காக நாட்டின் அனைத்துத் துறைகளிலும் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்போது, கிராமங்களுக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

நெல்சந்தைப்படுத்தல் தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகை ரவிகரன் எம்.பி

நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெறும்; ரவிகரன் எம்.பி எச்சரிக்கை நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல் கொள்வனவு கடந்த 26ஆம் திகதி மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் இதுவரை நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல்சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு தாமதமாகினால் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக விவசாயிகளுடன் இணைந்து முற்றுகைப் போராட்டம் ஒன்று இடம்பெறும் எனவும் எச்சரித்துள்ளார். முல்லைத்தீவு – மாவட்டசெயலகத்தில் 27.01.2026இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெரும்போக நெல்அறுவடை வன்னி உட்பட வடக்கு கிழக்கெங்கும் மும்முரமாக இடம்பெற்றுவரும்நிலையில் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விரைந்து நெற்கொள்வனவை மேற்கொள்ளுமாறு கடந்த 20.01.2026 அன்று பாராளுமன்றில் உரையாற்றியிருந்தேன். அதனைத்தொடர்ந்து கடந்த 21.01.2026அன்று…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எரிசக்திப் போர்கள், இறையாண்மை நெருக்கடிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கின் சிதைவு

குறுக்குச் சந்தியில் ஐரோப்பா ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எரிசக்திப் போர்கள், இறையாண்மை நெருக்கடிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்கின் சிதைவு ✧ பிரஸ்ஸல்ஸின் REPowerEU வியூகம்: எரிசக்தி சுதந்திரமா, அல்லது மத்தியமயமாக்கப்பட்ட கட்டாயமா? 2027-ஆம் ஆண்டிற்குள் ரஷ்ய எரிவாயு இறக்குமதிகளை முழுமையாக நிறுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு அதிரடியான ஒழுங்குமுறைக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐரோப்பாவின் எரிசக்தி அமைப்பில் நிகழும் மிகப்பெரிய மூலோபாய மாற்றங்களில் ஒன்றாகும். REPowerEU திட்டத்தின் கீழ், * ஜனவரி 2027-க்குள் ரஷ்ய திரவ இயற்கை எரிவாயு (LNG) மீது முழுத் தடை * 2027-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்திற்குள் குழாய் வழி ரஷ்ய எரிவாயு இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நடவடிக்கையை, எரிசக்தி சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றை…

மேலும் படிக்க