செய்திகள் தாயகச் செய்தி 

உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள்

தரையில் இடம்பெறும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் காலத்தில் கொள்ளையர்கள் நேரடியாக கடல் மற்றும் ஆற்றில் அகழ ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதில் தமிழர் பிரதேசமான திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 05 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே ஐந்து டிங்கி படகுகளை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது படகில் சுமார் 30 லிட்டர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

புதிய ஆர்க்டிக் பனிப்போரின் மையப்புள்ளியாக கிரீன்லாந்து .

புதிய ஆர்க்டிக் பனிப்போரின் மையப்புள்ளியாக கிரீன்லாந்து ⧉════════❁════════⧉ இறையாண்மை, நேட்டோ ஒற்றுமை மற்றும் ஏகாதிபத்திய அதிகார அரசியலின் மீள்வருகை ✦. கிரீன்லாந்தின் குரல்: “நாங்கள் விற்பனைக்கு அல்ல” உலக அரசியலின் ஓரங்கட்டப்பட்ட நிலப்பரப்பாக நீண்ட காலம் புறக்கணிக்கப்பட்டிருந்த கிரீன்லாந்து, இன்று உலக அதிகார அரசியலின் மையப்புள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதி மீதான போட்டி தீவிரமடையும் நிலையில், கிரீன்லாந்து இனி ஒரு பனித்தீவு அல்ல; அது உலக வல்லரசுகளின் மூலோபாய கணக்குகளில் மைய இடம் பிடித்துள்ள அரசியல் நிலப்பரப்பாக மாறியுள்ளது. இறையாண்மையை உறுதியாக நிலைநாட்டும் ஒரு அரிய மற்றும் தெளிவான அரசியல் நடவடிக்கையாக, கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன், டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் ஆகியோருடன் இணைந்து, கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற அமெரிக்காவின் மீண்டும் எழுந்த ஆர்வத்தைத் திட்டவட்டமாக நிராகரித்தார். வாஷிங்டனில் நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பிற்கு முன்னதாக…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் நாவற்குழி பகுதியில் வாகனம் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்து ள்ளனர்.

கிளிநொச்சி பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து சம்பவம் நாவற்குழி பகுதியில் நேற்று (14.01.2026) இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக டிப்பர் வாகனம் மின்கம்பம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பம், சுவர் ஆகியவற்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இரு இளைஞர்களின் சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா தற்காலிகமாக நிறுத்தம்.அமெரிக்க

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடைமுறைகள் திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வீசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயம்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு பத்து மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது. பிரதான வீதியில் காவல்துறையினர் வீதிச்சோதனை நடத்திய நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது போக்குவரத்து காவல்துறையினர் ரோச் லைட் அடித்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்ட போது அதனை மீறிச் சென்றவர்களை நிறுத்த சென்ற போதே இந்த நிலைமை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், காவல்துறையினர் இளைஞர்களை தலைக்கவசத்தினால் தாக்கியதுடன், அவர்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த பின்னரும் தொடர்ந்து தாக்கியுள்ளதாக அப்பகுதி இளைஞர்கள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக , புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது

அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது   திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி புத்தர் சிலை நிறுவப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 4 புத்த பிக்குகள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை ஜனவரி 19 வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி குறித்த புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும், இது கரையோர பாதுகாப்பு சட்டங்களுக்கு முரணானது எனவும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, போதிராஜ விகாரை என தெரிவிக்கப்படும் குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிலையை பொலிஸார் அகற்ற முயன்ற போது, புத்த பிக்குகள் உள்ளிட்ட சிறு குழுவினரால் எதிர்ப்பு எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் படிக்க