உலக அரசியல். கட்டுரை 

அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது: வடக்கு அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட மோதல்

அமெரிக்கா ரஷ்ய எண்ணெய் கப்பலை சிறைபிடித்தது: வடக்கு அட்லாண்டிக் கடலில் உச்சக்கட்ட மோதல் ⧉════════❁════════⧉ ╭──────────────────────╮ எழுத்துருவாக்கம்✒️ ஈழத்து நிலவன் ╰──────────────────────╯ 08/01/2026 ✦ சம்பவம்: சர்வதேச கடல் பகுதியில் ‘மெரினேரா’ (Marinera) சிறைபிடிப்பு வடக்கு அட்லாண்டிக் கடலில் ரஷ்யக் கொடியுடன் பயணித்த மெரினேரா (முன்னர் பெல்லா 1) எண்ணெய் கப்பலை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. வெனிசுலா கடற்கரையில் தொடங்கி பல வாரங்களாகத் தொடர்ந்த விரட்டல் நடவடிக்கையை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) இராணுவ உதவியுடன் முன்னெடுத்தது. வெனிசுலாவின் மதுரோ அரசு தொடர்புடைய தடைகளை மீறி எண்ணெய் கொண்டு சென்றதாகக் குற்றச்சாட்டுகள் இருந்த இந்தக் கப்பல், பயணத்தின் பாதியிலேயே பெயரை மாற்றி ரஷ்யக் கொடியைப் பூசி, அந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டது. ரஷ்யா இதனை சர்வதேச சட்டப்படி சட்டபூர்வமாகச் செயல் படுத்தப்பட்டது எனக் கூறுகிறது. மாஸ்கோ, அமெரிக்காவின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் ஜனாதிபதியும், கடற்படையும் இணக்கம்

கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; ஜனாதிபதியும், கடற்படையும் இணக்கம் கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; ஜனாதிபதியும், கடற்படையும் இணக்கம் கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் 07.01.2026நேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் இன்றைய தினம் அகற்றப்பட்டது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இடத்தை ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என சபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்தப் புதிய பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழில், பேரழிவை ஏற்படுத்தும் கனமழை; கிழக்கிலும் அவதானமாக இருக்கவும்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யுமென, யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இதனால், யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்,நேற்று (07) ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.யாழ்.ஊடக மையத்தில் நடத்தப்பட்ட இச்சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது; உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 09 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுnkன எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக,1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக இது அமைகிறது. இதன் நகர்வுப் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி…

மேலும் படிக்க