உலக செய்திகள் செய்திகள் 

காசாவில் போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, பொலிஸ் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.காசா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா தற்காலிகமாக நிறுத்தம்.அமெரிக்க

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடைமுறைகள் திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வீசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை ஈரானிய அரசாங்கம் கையாண்டு வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் வந்து சேரும் என ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த உதவிகள் எத்தகையவை அல்லது அவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. ஈரானில் கடந்த பல வருடங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகக் கருதப்படும் இப்போராட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானில் நிலவிய கடும் விலைவாசி உயர்வு…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம்

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம்   ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டின் மதச்சார்பு ஆட்சிக்கு எதிரான புரட்சியாக வெடித்துள்ளது. சுமார் 2 வாரங்களை நெருங்கும் இப்போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரானின் தலைமை வழக்கறிஞர் முகமது மொவாஹேதி ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கையில், “போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் ‘கடவுளின் எதிரிகளாக’ (Enemy of God) கருதப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஈரானிய சட்டப்படி இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ ‘சிறைப்பிடிப்பு

நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி மதுரோவின் அரசாங்கம் தேசிய அவசரகால நிலையை (National Emergency) பிரகடனப்படுத்தியுள்ளது.   இன்று (03) சனிக்கிழமையன்று, வெனிசூலாவின் கராகஸில் உள்ள லா கார்லோட்டா விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், அங்கிருந்து புகை கிளம்புவதைக் காண முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவிக்கப்படுன்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு “இராணுவ ஆக்கிரமிப்பு” என வர்ணித்துள்ள வெனிசுலா அரசாங்கம், தமது நாட்டின் சிவிலியன்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள் நடத்திய இந்தத் தாக்குதல்களின் பின்னரே அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. தமது நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிருடன் இருப்பதை…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களுக்கு பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் புதிய யூத குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் அண்மையில் அளித்த அனுமதியை பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 14 நாடுகள் கண்டித்துள்ளன. ‘ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்ததை பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மோல்டா, நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் கண்டிப்பதாக’ அந்நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஒரு இணைப்பு மற்றும் குடியேற்றக் கொள்கைகளின் விரிவாக்கத்தையும் தெளிவாக எதிர்க்கிறோம் என்பதை நாம் நினைவுகூர்கிறோம்’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய குடியேற்றங்கள் தொடர்பிலான அறிவிப்பை இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதி அமைச்சரான பெசலல் ஸ்மொட்ரிச் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டிருந்தார். பலஸ்தீன நாடு ஒன்று உருவாவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த முன்னெடுப்பு…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

இஸ்ரேலின் தாக்குதல்களில் காசாவில் மேலும் இரு பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

முடக்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து ஐ.நா. கவலை   காசாவில் தொடர்ந்து போர் நிறுத்த மீறலில் ஈடுபடும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அங்கு மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு பல இடங்களிலும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. காசா நகரின் கிழக்கு மற்றும் துபா பகுதிகளில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று (23) குண்டுகளை வீசியதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு காசாவின் கான் யூனிஸின் கிழக்கு பகுதி மற்றும் டெயிர் அல் பலாஹ்விலும் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.   போர் நிறுத்தத்தை இஸ்ரேல் தீவிரமாகவும் திட்டமிட்ட வகையிலும் மீறுவதாக கண்டித்த காசா அரச ஊடக அலுவலகம், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அதனை இஸ்ரேல் 875 தடவைகள் மீறி இருப்பதாக சுட்டிக்காட்டியது.…

மேலும் படிக்க
உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் 6 ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட சிறிது நேரத்திலேயே கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக நேரில் கண்டவர்களை தெரிவிக்கின்றனர். பாதிப்பு அல்லது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அரசும் கத்தாரில் வசிக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன. மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல்…

மேலும் படிக்க