இலங்கை செய்தி. செய்திகள் 

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பேருந்து; 11 பேர் உயிரிழப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (11) அதிகாலை கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரண்டிஎல்ல பிரதேசத்தில் கதிர்காமத்திலிருநது குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று, வீதியை விட்டு விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஆரம்பத்தில் 5 ஆண்களும் 3 பெண்களும் மரணமடைந்த நிலையில், வைத்தியசாலையில் மேலும் 3 பேர் மரணமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். பேருந்து கவிழ்ந்ததில் அதற்குள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம்

  மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (11.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில், 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினாலும் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் ஒருவர் பலத்த காயம்

அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்..! இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனத்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச் சென்றவரை இடையில் வழிமறித்து பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாக தெரியவருகிறது. தாக்குதலுக்குள்ளானவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (54)வயதுடையவரே இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி…

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தாவடி ஆலயத்தில் யானை மிதித்து பெண்கள் காயம்

யாழ் தாவடி-ஆலயத்திற்கு கொண்டு வந்த யாணை மிதித்து பக்தர்களிற்கு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் உள்ள ஆலயத்தில் நேற்றைய தினம் மஞ்ச உற்சவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது தெற்கில் இருந்து யானை கொண்டு வரப்பட்டு மஞ்சத்தின் முன்பாக அழைத்து வரப்பட்டுள்ளது. மஞ்சம் முன்பாக தீப்பந்தங்களை எடுத்துச் சென்ற சமயம் யானை மிரண்டதில் இரு பெண்கள் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓர் பெண்ணின் கால் பாதம் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் தாயகச் செய்தி 

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்தி மூன்று பேர் கைது

இந்தியாவிலிருந்து கஞ்சாவை கடத்திமூன்று பேர் கைது இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக பெருமளவான கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எழுவைதீவு கடற்பரப்பில் வைத்து, 323.35 கிலோ கேரள கஞ்சாவுடன் இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் (6) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் பேசாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய சந்தேகநபர் குருநகர் பகுதியையும் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் 

முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாது

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தங்கள் செய்யப்படாதென அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. செபெட்கோ மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் எரிபொருள் விலைகளை நேற்று நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும். 361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும். இதேவேளை 286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும். அத்துடன், 331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி செய்திகள் 

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில்  இன்று ஆரம்பமாகியுள்ளது. மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் 

தமிழகம்-காங்கேசன்துறை கப்பல் சேவைக்கான கட்டணம் குறைப்பு

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன் இதனை தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதில் கோடை விடுமுறை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக தற்போது 8,500 ரூபாயாக உள்ள சென்று வருவதற்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் தற்பொழுது 10 கிலோ வரை அனுமதிக்கப்படும் இலவச லக்கேஜ் இனி 22 கிலோ வரை அனுமதிக்கப்படும் என்றும் அதில் 7 கிலோ கைப்பையும், 15 ஒரு கிலோ லக்கேஜ் இலவசமாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி செய்திகள் 

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த 40 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும், மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச செயலர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்.

மேலும் படிக்க