செய்திகள் தாயகச் செய்தி 

தீவிபத்து; நிலமைகளை நேரில் சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன் தீவிபத்து; நிலமைகளை நேரில்சென்று ஆராய்ந்தார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன்னால் 16.05.2025இன்று ஏற்பட்ட தீவிபத்தில் வர்த்தகநிலையங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் முன்பகுதியிலுள்ள உணவகமொன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், குறித்த உணவகமும், உணவகத்தின் அருகேஇருந்த வர்த்தகநிலையமும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன், அருகே இருந்த மேலும் சில வர்த்தக நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இந்நிலையில் குறித்த பகுதிக்கு உடனடியாக நேரடியாகச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தீவிபத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனஞ்செலுத்தியதுடன், பாதிக்கப்பட்ட வர்த்தகநிலைய உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியதுடன், நிலமைகள் குறித்து ஆராய்ந்தார். அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப்பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார். எனவே…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சிசு ட இதுவரை 13 என்புத்தொகுதிகள் மனிதப் புதைகுழியில் அடையாளம்

யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. பணிகளின் ஐந்தாம் நாளான நேற்று (04) சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 5 தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை. அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மணியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி வழக்கு

செம்மணியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி வழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் விண்ணப்பம் செம்மணி சித்துபாத்தி மாயான பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (06) வழங்கப்படவுள்ளது. செம்மணி – சித்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளில் நேற்று (03) வரையில் 7 மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் 3 மனித எலும்பு கூட்டு எச்சங்களுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் அப்பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களின் சார்பில் சட்டத்தரணிகள் விண்ணப்பம்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காணாமல் ஆக்கப் பட்டோர் விவகார த்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர், தொடர் போராட்டத்தின் 3007ஆவது நாளில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதேவேளை, கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் இராணுவத்திடம் கையளித்த உறவுகளை, மீளக் கையளிக்குமாறு அவர்களின் உறவுகள் தொடர்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவும், குறிப்பாக எமது உறவுகள் வட்டுவாகல் பகுதியிலும் , முகாம்களிலும், கடலிலும் கைதுசெய்யப்பட்டதுடன் வெள்ளைவானிலும் கடத்தப்பட்டனர் இவ்வாறாக பலவழிகளிலும் எமது உறவுகளுக்கு கடந்தகால அரசுகள் துன்பங்களை விளைவித்தன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வாறு கையளிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு,…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம்

மட்டக்களப்பு – கரடியனாறு  காவல்துறை பிரிவிலுள்ள பாலர்சேனை ஆற்று நீரோடையில் கால் கட்டப்பட்ட நிலையில் மூழ்கிக்காணப்பட்ட ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். கரடியனாறு- வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய சிவகுமார் என்ற கூலித் தொழிலாளியே மரணித்துள்ளதாக அடையாளங்காணப்பட்டுள்ளது.இச்சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர் வேளாண்மை வாடியொன்றில் காவலாளியாகப் பணியாற்றிய இவர் கடைத்தெருவிற்குச் சென்று வருவதாக அவரது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளபோதிலும் இரவாகியும் வயல் வாடிக்குத் திரும்பவில்லை. இவரை தேடியவேளையில் வயல்வாடிக்கு மிகஅண்மித்துள்ள ஆற்றுநீரோயில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக கரடியனாறு காவல் துறையினருக்கு அறிவித்ததையடுத்து ஏறாவூர் திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நசிர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்டு சடலத்தை தண்ணீரிலிருந்து வெளியே எடுக்க முற்பட்டபோது அருகிலிருந்த வயல்வாடியின் நீர் பம்பியுடன் தொடர்புபடுத்தி வலது கால்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வர்த்தமானியை திரும்பப் பெற்றுள்ளது அரசாங்கம்

வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 கடந்த ர்ச் 28, அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில்,வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக களத்தில் இறங்கியிருந்த நிலையில்,தற்சமயம் குறித்த வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில்,ஈழத் தமிழர்கள் இருவர் தெரிவு

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் 100 பேரில், யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மூத்த பேராசி ரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சுந்தரலிங்கம் திருக்கணேஷ் ஆகியோர் தெரிவாகியுள்ளனர். சிங்கப்பூரை தளமாகக் கொண்டு வெளியாகும் ‘ஆசிய விஞ்ஞானி’ என்ற சஞ்சிகை ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகள் -100 பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். அதன்படி விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன்  பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில்,…

மேலும் படிக்க
செய்திகள் 

வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கே.டி. லால் காந்த

வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர் என காணி அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்  மேலும் கூறுகையில், வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாசிக்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இ.போ.ச பஸ் விபத்து:

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து காலி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பஸ்ஸில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.   உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்;

2 வருடமாகியும் புனரமைக்காத மகிழவெட்டுவான் பாலம்; அரசியல்வாதிகள் வந்தால் கட்டிப்போடுவோம் என பொதுமக்கள் சீற்றம்   வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது. இதனால் 2 வருடமாக மட்டக்களப்புக்கும் மகிழவெட்டுவான் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் பிரயாணம் செய்ய முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோகி வருவதாகவும் இதுவரை அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். மகிழவெட்டுவான் நரிப்புதோட்டம், கல்குடா, நெல்லூர் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான வீதியிலுள்ள மகிழவெட்டுவான் பாலம் கடந்த 2023 டிசம்பர் மாதம் உடைந்து வீழ்ந்துள்ளது.இதனால் மட்டக்களப்பு நகருக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் நகரில் இருந்து அந்த பிரதேசத்துக்கு செல்லும் பொது போக்குவரத்து பஸ் வண்டி பாலம் ஊடாக செல்ல முடியாது.அந்த பாலம் வரை…

மேலும் படிக்க