தாயகச் செய்தி 

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ அவர்கள் இன்றைய தினம் (04.01.2026) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வணக்கத்திற்குரிய விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் தமது பக்க நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார். ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும்

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்   அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்

தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் 31.12.2025 ந் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக – விகாராதிபதியுடன் அரசாங்க அதிபர் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அத் தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) அரசாங்க அதிபர் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, கொழும்பில் உயர்மட்ட கலந்துரையாடல் நடக்கவிருப்பதாகவும் அக் கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக பொருத்தமான மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் அரசாங்க அதிபர் அவர்களிடம் தெரிவித்தார். வணக்கத்துக்குரிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காதலியார் சம்மளங்குளத்தில் அடாவடித்தனமாக கற்குவாரி அமைக்க முயற்சி; துரைராசா ரவிகரன்

காதலியார் சம்மளங்குளத்தில் அடாவடித்தனமாக கற்குவாரி அமைக்க முயற்சி; துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட காதலியார் சம்மளங்குளம் கிராமத்தில் மக்களின் விருப்பிற்கு மாறாக கற்குவாரி ஒன்றினை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் முறையிடப்பட்டது. இந்நிலையில் குறித்தபகுதிக்கு இன்று (02.01.2026) நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மக்களின் விருப்பிற்கு மாறாக காதாலியார் சம்மளங்குளத்தில் கற்குவாரி அமைக்கப்பட்டால் மக்களோடு இணைந்து பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார். குறித்த களவிஜயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காதலியார் சம்மளங்குளம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு கற்குவாரி ஒன்றினை அமைத்து, பாறைகளை வெடிவைத்து தகர்த்து அகழ்வுசெய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து கிராமமக்களின் எதிர்ப்பினால் குறித்த கற்குவாரி கடந்த 2022ஆம் ஆண்டு மூடப்பட்டதாகவும் அப்பகுதி மக்களால் இதன்போது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

புத்தாண்டில் சோகம்: மருதங்கேணியில் குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலில் பலி

புத்தாண்டில் சோகம்: மருதங்கேணியில் குடும்பஸ்தர் கத்திக்குத்துத் தாக்குதலில் பலி யாழ்ப்பாணம், 2026 ஜனவரி 01: யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இன்று (வியாழக்கிழமை) மாலை 4:00 மணி அளவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு, உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், மருதங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட து. தவநேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று மாலை 4:00 மணி அளவில்  புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மருதங்கேணி பகுதியில் உள்ள ஆலயமொன்றில் திருவெம்பாவை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதன்போது வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தவநேசன் என்பவரை, பின்னால் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் குத்தியுள்ளார். முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ்ப்பாணம் செய்தியாளர் 01 01 2026 pm 20.03    

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் அர்ச்சுனா!

. பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் பாராளுமன்ற ,உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எமது உறுதிகள் பொய்யானவை என்பதனை நிரூபிக்கப்பட்டும் தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறி, எமது போராட்டத்தை கேலி செய்யும் பாராளுமன்ற ,உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எமது உறுதிகள் பொய்யானவை என்பதனை நிரூபிக்கப்பட்டும் என காணியை இழந்த உரிமையாளர்கள் பகிரங்க சவால் விடுத்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தில், தையிட்டி விகாரையால் காணிகளை இழந்த காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.ஆளுநர், அரச…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, வவுனியாவில் போராட்டம்

கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம்   கல்லுமலையும், வெடுக்குநாறியும் எங்கள் சொத்து, எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு, கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழ் மக்கள் மீதான ஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. வடக்கில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, தையிட்டி தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சிறுமி உயிரிழப்பு இரு மருத்துவர்கள் தற்காலிக இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமையினால் அனுமதிக்கப்பட்ட சிறுமி மருத்துவர்களின் சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளமை மருத்துவமனையின் நிர்வாகத்தின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து முல்லைத்தீவு சமூகம் இன்று நீதி வேண்டிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது இந்த போராட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவினை தெரிவித்துள்ளார்கள். உயிரிழந்த சிறுமியின் உருவப்படங்களை தாங்கிய பதாதைகைள கையில் வதை;து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதனை தொடர்ந்து  கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் மாவட்ட மருத்துவமனை பணிப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு வழங்கியுள்ளார்கள். மனுவில் உள்ள முக்கிய கோரிக்கையாக.. 1)டினோயாவுக்கு நடந்த கொலை தொடர்பிலான உண்மைத்தன்மையினை பணிப்பாளர் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். 2)இவ்வாறு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி,(ஓவியர் ரமணி)இயற்கை எய்தினர்

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள்  இயற்கை எய்தினர் அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 28 திகதி மாலை மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி கடலில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.உடுத்துறை வடக்கைச் சேர்ந்த விஜயமோகன் ஜெசிந்தன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க