ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்பு இலங்கை பாதுகா ப்புச் செயலாளர்
இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு ‘மார்க் 48’ ரக ஏவுகணை (Torpedo) மூலம்…
மேலும் படிக்க