சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு

கிவுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்; பெருந்திராளான மக்கள் பங்கேற்பு தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் வகையில் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்படும் கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டப்பேரணியொன்று 02.02.2026இன்று இடம்பெற்றது. அந்தவகையில் ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டப்பேரணியானது நெடுங்கேணி பேருந்து தரிப்பிடத்திலிருந்து ஆரம்பமாகி, வவுனியாவடக்கு பிரதேசசெயலகம் வரையில் இடம்பெற்றதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலக முன்றலிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார் கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் கோசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் ஜனாதிபதிக்கான மகஜர் இதன்போது ஒருங்கிணைந்த தமிழ் கட்சிகளால் வவுனியா வடக்குபிரதேசசெயலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. மேலும் இவ்வார்ப்பாட்டப் பேரணியில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி மீது காவல்துறை யினர் துப்பாக்கிப் பிரயோகம்

கிளிநொச்சியில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற  பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று (01) அதிகாலை கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சில்லுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம்.

யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமை.அந்தவகையில் இன்று (01) காலை கொட்டும் மழைக்கு மத்தியிலும் தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிக்கு அருகில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஏராளமான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர் இதேவேளை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தையிட்டி விகாரை தொடர்பில் உண்மைக்கு அப்பாற்பட்ட விடயங்களை யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்..  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையின் சுதந்திர தின நாளில் வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் :

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் த.யதுசன் இதனைக் குறிப்பிட்டார்.தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இப்போராட்டமானது சிறப்பாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

ரூ. 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா மற்றும் மருமகன் கைது

ரூ.2 கோடி 30 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேகநபர்களை சம்மாந்துறை  காவல்துறை.கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறை.பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பஸ் ஒன்றில் நேற்று (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரது வாக்குமூலம் மற்றும் சம்மாந்துறை  காவல்துறை.நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சம்மாந்துறை புற நகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப்  காவல்துறை.அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பிரகாரம் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான என். றிபாய்டீன் தலைமையிலான காவல்துறை.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். அருட்தந்தை மா.சக்திவேல்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க கோரி போராட்டம். பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு – நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவில் செயற்பட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அருட்தந்தை மா.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை மா.சக்திவேல், “ ஜெ. ஆர். ஜெயவர்த்தனவிற்கு இல்லாத கொடிய முகம் ஒன்று அநுரவிற்கு இருக்கிறது. இந்த சிங்கம் தெற்கில் உள்ள தமிழ் மக்களை வேட்டையாட காத்திருக்கிறது. இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழர்கள் சூரையாடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள்உளவாளிகள்.சி.சிவமோகன்

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவுக்குள் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் உளவாளிகள் கூட்டம் நுழைக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் , தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவில் சுமந்திரன் ஆதரவாளர்கள் தான் அதிகம் உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.   அவர்களால் புகுத்தப்பட்டவர்கள் தான் அங்கே அதிகம் உள்ளனர். பதில் செயலாளராக இருந்தவர் அந்தப் பதவியில் இருந்ததால் அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார்.   அதேபோல் சாணக்கியன் எம்.பி எப்படி உள்வாங்கப்பட்டவர் என்று தெரியாமல் உள்வாங்கப்பட்டு விட்டார். உண்மையில் இறுதிப் பொதுக்குழு கூடிய போது சாணக்கியன் எமது கட்சியில் இல்லை. அவர் எப்படி அரசியல் குழுவில் உள்வாங்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அது மர்மமாகவே இருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இலச்சினையை அனுமதி இல்லாமல் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், அனுமதி பெறாமல் இலச்சினையைப் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கெதராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம், எதிர்வரும் 2026, பெப்ரவரி மாதம், 19,20,21,22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதன் போது பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் பல்கலைக்கழக இலச்சினை பொறிக்கப்பட்ட கழுத்துமாலை, பட்டச் சான்றிதழ் சுருள் மற்றும் பல்கலைக்கழகப் இலச்சினை பொறிக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் என்பன தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களினால் விற்பனை செய்யப்படுவதாகப் பலகலைக்கழக நிர்வாகம் அறிகிறது. இது சட்டப்படி குற்றச்செயலொன்றாகும். பல்கலைக்கழக மூதவை மற்றும் பேரவையின் அனுமதியுடன், நடைமுறைகளின் ஊடாக பல்கலைக்கழக இலச்சினையைப் பயன்படுவதற்குப் பதிவாளரிடமிருந்து உரிய ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும்.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை

யாழ் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவ மனையாக தரம் உயர்த்த நடவடிக்கை மருத்துவர் நிஹால் அபேசிங்கே   தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்த பின்னர், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை, தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழு கடந்த 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் மருத்துவர் நிஹால் அபேசிங்கே தலைமையில் கூடியது. இதன்போது, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் நிறுவன மதிப்பாய்வு இடம்பெற்றது. இதன்போது தற்போது வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்தவும் மேலதிக ஊழியர்களின் தேவை அதிகரித்து வருவதாக யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மருத்துவமனையை தேசிய மருத்துவமனையின் நிலைக்கு மேம்படுத்த வேண்டியதன் அவசியமும் எடுத்துக் கூறப்பட்டது இந்த நிலையில் தேவையான அளவுகோல்களை பூர்த்தி…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார்,யாழ்பல்கலைக் கழகத்துக்கு விஜயம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் அம்மையார், நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர்,நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்தும் கலந்துரையாடினார். இச்சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் உட்பட சமகால விடயங்கள் பற்றியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கனேடியத் தூதரக அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் படிக்க