தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டு

வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் பெரியவிளான் பகுதியில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணியால் மக்கள் தினமும் பல்வேறு அவஸ்தைகளுக்கு உள்ளாவதாக குற்றம்சாட்டப்பட்டது. வலி. தென்மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது பெரியவிளான் வட்டார உறுப்பினரான எட்வேட் மரியவாசினி குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், பெரியவிளானில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணியில் பற்றைகள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து பாம்புகள் வெளியே வந்து அருகில் இருக்கின்ற மக்களின் குடிமனைகளுக்குள் செல்கின்றது. இதனால் மக்கள் தினம்தினம் அச்சத்தில் வாழ்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஆறு ஏழு பாம்புகள் அங்கிருந்து வெளி வருகின்றன. இதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தவிசாளர் க.ஜெசீதன், பாதீனியம் உள்ள எத்தனை காணிகளுக்கு எதிராக வழக்கு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

வடக்கின் சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்ப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை; ஆளுநர் ஊடாக சீரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சின் மேலதிகசெயலார் பதில். வடக்கு மாகாணத்தின் சீரற்ற ஆசிரியவளப் பரவலாக்கத்தினால் வன்னிப் பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே சீரற்ற ஆசிரிய வளப் பரவலாக்கத்தை விரைந்து சீர்பபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வடக்குமாகாண ஆளுநர் ஊடாக வடக்குமாகாணத்தில் நிலவும் சீரற்ற ஆசிரியவளப் பற்றாக்குறையைச் சீர்செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரால் இதன்போது பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக் குழு அறையில் 20.02.2026 இன்று இடம்பெற்ற கல்வி, ஊழியப்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த கூட்டத்தில் தம்மால் கலந்துரையாடப்பட்ட விடயங்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம்

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டம் இன்று (20) காலை 11 மணியளவில் ஏ 9 வீதி நகர் பிள்ளையார் கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் முன் நின்று தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய பின்னர்  டிப்போ சந்தி அண்மித்த மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது. “வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் தொடர்ச்சியாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்கள்! வடக்கு மாகாண ஆளுநர்

பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.இன்றையதினம் பலாலி விமான நிலையத்திற்கு அமைச்சர்கள் குழாமுடன் விஜயம் செய்து, அபிவிருத்தியை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்திற்கு விமான துறை சார்ந்த பணியாளர்களை வடக்கில் இருந்து அதிகளவாக நியமித்தல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்காக விமானத்துறை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து ஆளுநர் செயலகத்தில் கூட்டம் ஒன்றினையும் நடாத்தி இருந்தனர். அதன் பின்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தையும் பார்வையிட்டனர். பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு மற்றும் வசதிகள் போதாமல் உள்ளமை தொடர்பாக அந்த இடங்களை பார்வையிட்டு, அபிவிருத்திகளை விரைவுபடுத்தல் போன்றன பற்றியும் இங்கே கலந்துரையாடினார்கள்.சர்வதேச விமான நிலையமாக இருக்கின்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி கற்ற யாழ்.நயினாதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இன்று வியாழக்கிழமை (19.02.2026) ஆரம்பமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் ஆரம்ப நாளில் 8 தங்கப் பதக்கங்களைச் சுவீகரித்துள்ளார். இதன்மூலம் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவியாக மேற்படி மாணவி இடம்பிடித்துள்ளார். மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம், சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology) மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற துறைகளில் விசேட சித்தி, மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது ஆகியவற்றுக்காகவே குறித்த தங்கப் பதக்கங்கள் மாணவி அபிராமிக்கு வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சேனைப்புலவு பாலத்தை அமைக்குமாறு வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி

சேனைப்புலவு பாலத்தை அமைக்குமாறு வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி வவுனியா வடக்கு பிரதேசசெயலர்பிரிவின், நெடுங்கேணி, சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில் அமைந்துள்ள சேனைப்புலவு பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த பாலம் உரிய திட்டங்களினூடக உள்ளவாங்கப்பட்டு நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வவுனியா வடக்கு பிரதேசசெயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன்,சமூக செயற்பாட்டாளர் ச.வசந்தகுமார் மற்றும் அப்பகுதி மக்களின் அழைப்பை ஏற்று சேனைப்புலவுப் பகுதிக்கு நேரடியாக களவிஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அப்பகுதிமக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து நெருக்கடி தொடர்பில் பார்வையிட்டிருந்ததுடன், குறித்த சேனைப்புலவு முதலாம் ஒழுங்கையில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் அமைப்புகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கோரி முக்கிய கலந்துரையாடல்!

சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் அமைப்புகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்! நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தினால், சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளவுள்ள இடர்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணச் சமூகச் செயற்பாட்டு மையம் மற்றும் அதனுடன் இணைந்த கிராமிய நுண்கடன் சேவை வழங்கும் அமைப்புகள் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தன. ​குறித்த கலந்துரையாடலில், நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட இச் சட்டத்தினால் நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படப்போகும் இடையூறுகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. ​இச்சட்டமானது நுண்கடன் சேவை வழங்குநர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், ஏனைய விடயங்கள் அக்குறிக்கோளைப் பாதிப்பதாக அமைந்துள்ளன. ​மிகக் குறிப்பாக: 1.சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் சேவை வழங்குநர்களை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு!

பிரித்தானிய பிரதிப் பிரதமருடன் தமிழ் தேசியக் கட்சிகள் சந்திப்பு! இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய பிரதிப் பிரதமர் Rt Hon. David Lammy மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) ஆகியோருக்கும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. ​மேற்படி கலந்துரையாடலில் நல்லிணக்கம், நீதி மற்றும் தமிழ் சமூகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்கவும், நீதி மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், தமிழ் பிரதிநிதிகளின் குரலை தொடர்ந்து ஒலிக்கச் செய்யவும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. ​ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளும் தேசிய இனப் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 தமிழக மீனவர்கள் நேற்றிரவு கைது

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பு அருகே 12 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் மன்னார் கடற்பரப்பில் 10 இராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு படகுகளுடனும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இவர்கள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை மற்றும் மன்னார் நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதி தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல்.

பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதி தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பொறியியலாளர் பொதுமக்களுக்கு அறிவிக்கும் மிக முக்கியமான அறிவித்தல். பரந்தன் கரைச்சி முல்லைத்தீவு (A035) வீதியிலுள்ள இல. 11/1 (இந்தியன் பாலம்) பாலத்தினூடாக கனரக வாகனங்களுக்கான பயணக்கட்டுப்பாடு தொடர்பானது. மேற்படி பாலமானது அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலின் பின்னர் இந்திய அரசாங்கத்தினால் தற்காலிக பாலமாக அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தது. இப்பாலத்தில் காலத்திற்கு காலம் ஏற்பட்ட பாதிப்புகள் உடனடியாக போக்குவரத்திற்கு உகந்த முறையில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தமை தாங்கள் அறிந்ததே. இந்நிலையில், அண்மைக்காலமாக இப்பாலத்தில் அடிக்கடி ஏற்பட்ட பாதிப்புக்களைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தரப்புகளின் நேரடியான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து கீழ் குறிப்பிடப்பட்டவாறு மட்டுப்படுத்தப்படுகின்றது. 01. பேருந்து தவிர்ந்த அனைத்து விதமான கனரக வாகனங்களும்…

மேலும் படிக்க