தாயகச் செய்தி 

தொண்டைமானாறு ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.!

சற்றுமுன் தொண்டைமானாறு ஆற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.! தொண்டைமானாறு கடல் நீர் ஏரியிலிருந்து இன்று மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். மீன்படி நடவடிக்கைக்கு வந்த மீனவர்கள் சடலம் ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63 எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்பு வதற்கு கனடா உதவும்; யாழில் கனேடிய தூதுவர்

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டு தூதுவர் உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கு,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

ஏகம்பைக்குளம் மற்றும் பிராமணகுளத்தை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

https://youtu.be/Xzn0k3zATN0 முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையப்பிரிவிலுள்ள ஏகம்பைக்குளத்தையும், பிராமணகுளத்தையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். குறித்த குளங்கள் இரண்டும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்தநிலையில், தற்போது அப்பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருகின்றனர். இத்தகையசூழலில் குறித்த பகுதியை வனவளத்திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த குளங்களை விடுவிப்புச்செய்து மக்களின் விவசாய பயன்பாட்டிற்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏகம்பைக் குளம், பிராமண குளம் என்பன இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் காணப்படுகின்றது. எனவே குறித்த குளங்கள் விடுவிக்கப்படவேண்டும். அத்தோடு தற்போது குறித்த பகுதியிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவருவதாகவும் , இந்நிலையில் அப்பகுதியை வனவளத் திணைக்களத்தினர் ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிய முடிகின்றது. இதுதொடர்பில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் விளக்கமளிக்கவேண்டும் என…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடு களுக்கு காவல் துறையே காரணம். ரவிகரன் எம்.பி

ஒட்டுசுட்டானில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு காவல்துறையே காரணம் ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; புலிகள் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்தனரெனவும் சுட்டிக்காட்டு ஒட்டுசுட்டானில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு  காவல்துறையே ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு; புலிகள் சட்டம் ஒழுங்கினை பாதுகாத்தனரெனவும் சுட்டிக்காட்டு முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுச் செயற்பாடுகளுக்கு காவல்துறையே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு விடுதலைப்புலிகளின் காலத்தில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றதில்லை எனக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், விடுதலைப்புலிகள் முறையாக சட்டம் ஒழுங்கினைப் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.07.2025இன்று இடம்பெற்றது. இந்நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுச்செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற முன்மொழிவொன்றை ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் அபிவிருத்திக்குழுவில் முன்வைத்தார். இதன்போது கருத்துத்தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள்

செம்மணியின் இரண்டாம் கட்ட எட்டாம் நாள் அகழ்வின் போது 40 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் இன்று எட்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜா அவர்களின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு இன்று நடைபெற்றது. இதுவரை 34 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலதிகமாக, 6 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் தண்ணீர் தொட்டியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இணுவில் மேற்கைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி இளைஞருக்கு வலிப்பு வருவதாகவும் நேற்று முன்தினம் (25) பிற்பகல் தந்தையாரின் மரக்காலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் தெல்லிப்பளையில் உள்ள அவர்களின் பிறிதொரு வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன். மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை  காவல்துறை மேற்கொண்டுள்ளனர்.      

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

குடமுருட்டி பாலத்திற் கருகில் தடண்புரண்டு விபத்துக் குள்ளான பாரவூர்தி ;

கிளிநொச்சி – குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பாரவூர்தி ஒன்று தடண்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்து இன்று அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்டுள்ளது. முத்துராஜவெலவிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளனது. குறித்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது. விபத்தின் போது கொள்கலனில் இருந்த பெருமளவு டீசல் கசிந்து வெளியேறி விரயமாகியுள்ளது. இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதையடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணல்காடு பகுதியில் இருந்து அதிகாலை கட்டுமரத்தில் கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் இதுவரை கரை சேரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான அ.ஆனதாஸ் (38 வயது) என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த மீனவர் வியாழக்கிழமை (26) அதிகாலை மீன்பிடித் தொழிலுக்காக சென்றுள்ளதுடன் வழமையாக 9.00 மணியளவில் கரை சேரும் இவர் இதுவரை திரும்பி வராத நிலையில் உறவினர்கள் படகில் தேடிச் சென்ற வேளை, அவர் பயணித்த கட்டுமரம் கடலில் மிதந்து வந்துள்ளது. மணல்காடு மீனவர்கள் தற்போது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்‌.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வெலிஓயா, பெரும் பான்மை இனத்தவர் களுக்கு இறங்குதுறை வழங்க முடியாது – ரவிகரன் எம்.பி;

வெலிஓயா, பெரும்பான்மை இனத்தவர்களுக்கு இறங்குதுறை வழங்கமுடியாது – ரவிகரன் எம்.பி; அபகரித்துள்ள தமிழர்களது காணிகளை மீள ஒப்படைத்துவிட்டு வெளியேறுமாறும் எச்சரித்தார். வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணிகளை, மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்பான்மை இனத்தவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டுமெனவும் எச்சரித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 25.06.2025நேற்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் கடற்றொழில்மேற்கொள்வதற்கு நாயாறுப்பகுதியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி கோரியிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்கிளாய்தொடக்கம்,…

மேலும் படிக்க