சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனவழி ப்பு நினைவுத் தூபி- கனடாவில் திறந்து வைக்கப்பட்டது

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது   பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு!! கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர். ஒளிப்படங்கள் https://www.facebook.com/profile.php?id=100063943606793

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் கோரிக்கை!

  May 10, 2025 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு எதிர்வரும் மே 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையில், உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி அமலநாயகி இவ்வாறு தெரிவித்தார். 16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எங்களுக்கு நடந்த இனஅழிப்புக்கான எந்த நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது, அதனை முன்னிட்டு எதிர்வரும் 12…

மேலும் படிக்க
இலங்கை சிறப்புச் செய்தி 

உலங்கு வானூர்தி விழுந்து விபத்து; ஐந்து இராணுவ வீரர்கள் பலி

விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி இன்று காலை அவசரமாக தரையிறங்கும்போது மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியதில் ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட உலங்கு வானூர்தி மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியது, அதில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விமானப்படை உலங்கு வானூர்தி ஊழியர்கள் இருவரும், இராணுவ சிறப்புப் படை வீரர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

காணி அபகரிப்பு தொடர்பாக கஜேந்திரகுமார் ஆற்றிய உரை

(08.05.2025) நாடாளுமன்றத்தில்..நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்காணி அபகரிப்பு தொடர்பாக ஆற்றிய உரை

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

விடுதலைப்புலிகளுக்கு அகவை 49

புதிய தமிழ்ப் புலிகள் என்பது 1972 மே 22 ஆம் நாள் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தனது 17வது வயதில் புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பைத் தொடங்கினார் இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்கு முறையையும் அதன் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்ப்பதையும், தமிழருக்கான தமிழீழம் ஒன்றை அமைப்பதையும் நோக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட புரட்சிகர அமைப்பாகும் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் 1976 மே 5 ஆம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தமிழர்கள் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில் சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நடைமுறைக்கு கொண்டுகொண்டு வரப்பட்டது.…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மன்னார்-யாழ் பிரதான வீதியில் பஸ் விபத்து; 

மன்னார்-யாழ் பிரதான வீதி,கள்ளியடி பகுதியில் நேற்று 03) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றி வந்த தனியார் பஸ் கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த ஹென்டனர் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பஸ்ஸில் மோதி குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிலில் நின்ற நபரும் காயமடைந்ததுடன்,அவரது மோட்டார் சைக்கிலும் பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த விபத்தில் ஹென்டனர் ரக வாகனத்தின் சாரதி,உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது…

மேலும் படிக்க
அண்மை செய்தி சிறப்புச் செய்தி செய்திகள் 

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் கிளிநொச்சியில்  இன்று ஆரம்பமாகியுள்ளது. மே முதலாம் திகதியான இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி உறவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் படிக்க