சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் தந்தை இன்று காலமாகியுள்ளார்

தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிப்பதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி மாவீரர் லெப். சங்கர் அவர்களின் தந்தை இன்று பிரித்தானியாவில் காலமாகியுள்ளார் அவருக்கு எமது புகழ்வணக்கம் மாவீரர் லெப்.சங்கர்  

மேலும் படிக்க
இலங்கை செய்திகள் 

கொத்மலை விபத்தில் காயமடை ந்தவர்களை நேரில் பார்வையிட்ட பிரதமர்!

நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் சிரமதானப்பணி

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு வாரம் தொடங்க இருக்கும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 11.05.2025 அன்று முள்ளிவாய்க்கால் மண் ஊர்மக்களோடு இணைந்து பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முற்றத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.  

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனவழி ப்பு நினைவுத் தூபி- கனடாவில் திறந்து வைக்கப்பட்டது

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது   பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு!! கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர். ஒளிப்படங்கள் https://www.facebook.com/profile.php?id=100063943606793

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் கோரிக்கை!

  May 10, 2025 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு எதிர்வரும் மே 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையில், உயிர் நீர்த்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியத்திற்காக பயணிப்போர் உள்ளிட்ட அனைவரும் முன் வர வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி அமலநாயகி இவ்வாறு தெரிவித்தார். 16வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் எங்களுக்கு நடந்த இனஅழிப்புக்கான எந்த நீதியும் கிடைக்கவில்லை. இலங்கை அரசின் இன அழிப்பு நாள் மே 18 அதை எம்மால் ஒருபோதும் மறந்து விட முடியாது, அதனை முன்னிட்டு எதிர்வரும் 12…

மேலும் படிக்க
இலங்கை செய்திகள் 

பள்ளத்தில் வீழ்ந்த இ.போ.ச. பேருந்து; 11 பேர் உயிரிழப்பு

கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை, கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று (11) அதிகாலை கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரண்டிஎல்ல பிரதேசத்தில் கதிர்காமத்திலிருநது குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) பேருந்து ஒன்று, வீதியை விட்டு விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் வீழ்ந்து புரண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொத்மலை மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் ஆரம்பத்தில் 5 ஆண்களும் 3 பெண்களும் மரணமடைந்த நிலையில், வைத்தியசாலையில் மேலும் 3 பேர் மரணமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தனர். பேருந்து கவிழ்ந்ததில் அதற்குள்…

மேலும் படிக்க
இலங்கை செய்திகள் 

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (11.05.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில், 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினாலும் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

இனந்தெரியாத கும்பலொன்று தாக்குதல் ஒருவர் பலத்த காயம்

அச்சுவேலியில் இன்று காலை இனந்தெரியாத கும்பலொன்று நடத்திய தாக்குதலில் கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்..! இன்று அதிகாலை 6.15 மணியளவில் அச்சுவேலி வைத்தியசாலை வீதியூடாக தனது கடையினைத் திறப்பதற்கு சென்ற வேளை இடைவழியில் மறித்த இனத்தெரியாத கும்பல் கடை உரிமையாளர் மீது கடுமையாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த வீதியில் கார் ஒன்றில் காத்திருந்த இனந்தெரியாதோர் கடைக்குச் சென்றவரை இடையில் வழிமறித்து பொல்லுகளால் கடுமையாக தலை, கை என்பவற்றில் தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதல் நடாத்திய இருவர் தம்மை அடையாளம் காணாதவாறு முகத்தை துணியால் கட்டி மறைத்திருந்ததாக தெரியவருகிறது. தாக்குதலுக்குள்ளானவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக உணவகமொன்றினை நடாத்திவரும் சின்னையா ஆலாலசுந்தரம் (54)வயதுடையவரே இவ்வாறு பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வாழைச்சேனையில் மண் அகழ்வை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று வியாழக்கிழமை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர் உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன், பொலிஸாரின் அடாவடியை எதிர்த்து சுட்டெரிக்கும் வெய்யிலில் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணியடி ஐஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்களையடுத்து இத்…

மேலும் படிக்க