சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி,(ஓவியர் ரமணி)இயற்கை எய்தினர்

ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள்  இயற்கை எய்தினர் அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு, தாளையடி கடலில் குளிக்கச் சென்ற காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் 28 திகதி மாலை மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி கடலில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.உடுத்துறை வடக்கைச் சேர்ந்த விஜயமோகன் ஜெசிந்தன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை முற்றாக புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை ஏகமனதாக தீர்மானம் நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து கௌரவ உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என்று இன்று நடைபற்ற பிரதேச சபைக் கூட்டத்தில் தவிசாளர் ம. மயூரன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தினை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் தன்னுடைய உரையில் நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தவிசாளர், உப தவிசாளர் ஆகியோருடன் வேறு கட்சிகளின் இரு உறுப்பினர் மட்டுமே பங்குபற்ற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி சார்பில் பிரதிநிதிகளை அழைத்து பிரச்சனைகளைக் கேட்பதற்கு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் ஒன்றும் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பான கூட்டம் அல்ல. அது மக்களின் குறை நிறைகளைத் தீர்க்கின்ற, பிரதேசங்களினை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

டினோஜாவின் சந்தேகத்தி ற்கிடமான மரணம்; நீதிகோரி வைத்திய சாலையை முற்றுகையிட்ட மக்கள்

சிறுமி டினோஜாவின் சந்தேகத்திற்கிடமான மரணம்; நீதிகோரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள் முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச்சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி 29.12.2025இன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரும்வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதிகிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன. அந்தவகையில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது

சிலாவத்தைப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தைப் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 12 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. இதற்கமைய மத்திய சுகாதார அமைச்சின் விசேட விசாரணைக் குழு முல்லைத்தீவுக்கு சென்றதாகவும் இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தனக்கு அறிவித்ததாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் சமன் பத்திரன தெரிவித்தார். 6 விசேட நிபுணர்களைக் கொண்ட அறுவர் அடங்கிய குழு நேற்றய தினம் முல்லைதீவு மாவட்ட பொது மருத்துவமனைக்கு சென்று சிறுமியின் மரணம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இவ்வாறிருக்க மாகாணத்துக்குள் ஆரம்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒரு வாரத்தில் கிடைக்குமென்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

72 மணித்தியால தடுப்புக் காவலில் கைதான டக்ளஸ் தேவானந்தா

72 மணித்தியால தடுப்புக் காவலில் கைதான டக்ளஸ் தேவானந்தாஉத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி காணாமல் போனமை குறித்து விசாரிக்க அனுமதி முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணித்தியாலங்கள் (3 நாட்கள்) தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று (27) கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதைதைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நீதவான் குறித்த அனுமதியை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைக்கமைய நேற்று (26) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உடையும் உலக ஒழுங்கு உக்ரைன் மேல்தட்டு வர்க்கத்தின் பீதி,

உடையும் உலக ஒழுங்கு உக்ரைன் மேல்தட்டு வர்க்கத்தின் பீதி, பிரிக்ஸ் (BRICS) நிதிப் புரட்சி மற்றும் ஐரோப்பாவின் வியூகத் தற்கொலை ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ கீவ் மீது விழும் நிழல்கள்: உக்ரைன் மேல்தட்டு வர்க்கத்தின் வெளியேற்றம் உக்ரைனின் அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார மேல்தட்டு வர்க்கங்களுக்குள் பீதி வேகமாகப் பரவி வருகிறது எனக் கூறி, ரஷ்யாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான SVR ஒரு திட்டமிட்ட உளவியல்–தகவல் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.மாஸ்கோவின் கூற்றுப்படி, போர் முடிவுக்குப் பிந்தைய அரசியல் வீழ்ச்சியை முன்கூட்டியே கணித்து, உக்ரைனிய அரச இயந்திரம் ரகசியமாகத் தயாராகி வருகிறது.இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை: • உயர் அரசியல் அதிகாரிகளும், பெரும் செல்வந்தர்களுடன் தொடர்புடைய வணிகத் தலைவர்களும் தங்கள் குடும்பங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. • வெளிநாட்டு வங்கிகளுக்குப் பாரிய அளவிலான மூலதன மாற்றங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!

டக்ளஸ் தேவானந்தா CID இனால் அதிரடி கைது!- கைத்துப்பாக்கி விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். அத்திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (26) கைது செய்யப்பட்டதாக,  காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவத்தினால் அவருக்குத் தற்காப்புக்காகச் சட்டபூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக கைத் துப்பாக்கி ஒன்று, 2019 ஆம் ஆண்டு வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மாகந்துரே…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு

ஆழிப்பேரலை 21ஆம்ஆண்டு நினைவேந்தல்; கண்ணீரில் மிதந்தது கள்ளப்பாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் முல்லைத்தீவு – கள்ளப்பாட்டைச் சேர்ந்த பொருந்திரளான மக்கள் உயிரிழந்தனர். இந் நிலையில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.12.2025இன்று கள்ளப்படு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள்,…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி 

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; முல்லை சுனாமி நினைவாலயத்தில் முன்னெடுப்பு

ஆழிப்பேரலை 21ஆம் ஆண்டு நினைவேந்தல்; முல்லை சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் 26.12.2025இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன.

மேலும் படிக்க