சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

சுன்னாகம் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விகாரைப் பெயர்ப்பலகை வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினால் இன்றைய தினம் அகற்றப்பட்டது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இடத்தை ‘கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்’ என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என சபையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட பெயர்ப்பலகை காணப்பட்ட அதே இடத்தில், ஒல்லாந்தர் காலத்தில் அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் வரலாற்றுச் சிறப்பம்சங்களை விபரிக்கும் வகையிலான புதிய கல்வெட்டுப் பெயர்ப்பலகை ஒன்று மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலச் சந்ததியினருக்குச் சரியான வரலாற்றைக் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்தப் புதிய பெயர்ப் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழில், பேரழிவை ஏற்படுத்தும் கனமழை; கிழக்கிலும் அவதானமாக இருக்கவும்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யுமென, யாழ்.பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். இதனால், யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில்,நேற்று (07) ஊடக சந்திப்பு நடத்தப்பட்டது.யாழ்.ஊடக மையத்தில் நடத்தப்பட்ட இச்சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது; உருவாகியுள்ள தாழ்வு மண்டலமானது நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி மணிக்கு 09 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது. இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுnkன எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக,1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக இது அமைகிறது. இதன் நகர்வுப் பாதை கடல் பகுதியாக இருந்தாலும் வடக்கு நோக்கி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி 

வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வேலன் சுவாமிகள், வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 30 பேர் வரையானோருக்கு எதிராக காவல் துறையினரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வேலன் சுவாமி உட்பட முன்னர் கைதான ஐவர் மற்றும் அவர்களுக்கு மேலதிகமாக அழைப்பாணை விடுக்கப்பட்டவர்களும் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் இவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் .அமைதி வழிப் போராட்டங்களுக்கு இலங்கை அரசியலமைப்பிலும் தீர்க்கப்பட்ட வழக்குகளினூடாகவும் உரித்துகள் வழங்கப்பட்டுள்ளமையை விசாரணையின்போது நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியதாக எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த தவறினால் மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வர்; ரவிகரன்

சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த தவறினால் வடக்கு மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வர்; கடற்றொழில் அமைச்சருக்கு தெரிவித்தார்- ரவிகரன் எம்.பி   வடபகுதி கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரியிலிருந்து சட்டவிரோத கடற்றொழில்கள் கட்டுப்படுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கமைய, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், தவறினால் வடபகுதி மீனவர்கள் போராட்டத்திற்கு அணி திரள்வார்கள் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் 05.01.2026இன்று இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயேயே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதொடர்பாக பேசப்பட்ட விடயங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்பில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இடைக்கால அறிக்கை.

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கத்துடன் கைது

ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது   வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட ஐந்து கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்துடன் விமானப் பணிப்பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய இச்சந்தேக நபரின் பயணப்பொதியில் 1.163 கிலோகிராம் நிறை கொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்கள் காணப்பட்டதாகத் தெரிவித்த சுங்க அதிகாரிகள், இவர் இலங்கை தனியார் நிறுவன விமானப் பணிப் பெண்ணென்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர். கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து விமானக் குழுவினருக்கான வெளியேறும் வாயில் வழியாக வெளியேற முயன்றபோது அவரின் பயணப்பொதியில் தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இயக்குநரான பாரதிராஜா திடீரென சுகவீனம் மருத்துவமனையில் அனுமதி.

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநரான பாரதிராஜா திடீரென சுகவீனமடைந்ததைத் தொடர்ந்து சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவர் சுகவீனமடைந்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு நயினாதீவு விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ அவர்கள் இன்றைய தினம் (04.01.2026) காலை. 10.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக வணக்கத்திற்குரிய விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார். மேலும் வணக்கத்திற்குரிய விகாராதிபதி அவர்கள் தமது பக்க நிலைப்பாடுகளையும் அரசாங்க அதிபரிடம் தெரிவித்தார். ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும்

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்   அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ ‘சிறைப்பிடிப்பு

நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி மதுரோவின் அரசாங்கம் தேசிய அவசரகால நிலையை (National Emergency) பிரகடனப்படுத்தியுள்ளது.   இன்று (03) சனிக்கிழமையன்று, வெனிசூலாவின் கராகஸில் உள்ள லா கார்லோட்டா விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், அங்கிருந்து புகை கிளம்புவதைக் காண முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவிக்கப்படுன்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு “இராணுவ ஆக்கிரமிப்பு” என வர்ணித்துள்ள வெனிசுலா அரசாங்கம், தமது நாட்டின் சிவிலியன்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள் நடத்திய இந்தத் தாக்குதல்களின் பின்னரே அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. தமது நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிருடன் இருப்பதை…

மேலும் படிக்க