உலக அரசியல். கட்டுரை 

மத்திய கிழக்கு போர்க்களம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதலின் புவிசார் அரசியல் வெடிப்பு

மத்திய கிழக்கு போர்க்களம்: ஈரான்–இஸ்ரேல்–அமெரிக்க மோதலின் புவிசார் அரசியல் வெடிப்பு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦. நேரடி ஏவுகணை மோதல்: மறைமுகப் போரின் முடிவும், வெளிப்படையான இராணுவத் தாக்குதலின் தொடக்கமும் மத்திய கிழக்கு பல தசாப்தங்களாக நேரடி போருக்கு பதிலாக பிரதிநிதி இயக்கங்கள், உளவுத்துறை ஊடுருவல்கள், பொருளாதாரத் தடைகள், மறைமுகத் தாக்குதல்கள் மற்றும் நிழல் யுத்தங்களின் மூலம் பதற்றத்தைத் தாங்கி வந்தது. ஆனால் இப்போது அந்தக் கட்டுப்படுத்தப்பட்ட மோதல் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் தனது நிலப்பரப்பிலிருந்தே பாலிஸ்டிக் ஏவுகணைகள், தூரப் பாய்ச்சி ஏவுகணைகள் மற்றும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சுமார் முப்பத்தைந்து உயர்திறன்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

சிறுபோகத்திலும் நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சிய சாலைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – ரவிகரன்

நெல் சந்தைப்படுத்தல்சபை சிறுபோகத்திலும் தவறிழைக்க முடியாது; சிறுபோக அறுவடைக்கு முன்னரே நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார்நிலையில் இருக்கவேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. நெல்சந்தைப்படுத்தல் சபையினர் தமது களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்மூட்டைகளை அகற்றாது தேக்கிவைத்திருந்ததன் காரணத்தினால் 2025 – 2026ஆம் ஆண்டுகளுக்குரிய பெரும்போக காலத்தில் அறுவடைசெய்யப்பட்ட நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டிருந்ததாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குரிய சிறுபோக காலத்திலும் நெல் சந்தைப்படுத்தல் சபை அத்தகைய தவறை செய்யக்கூடாதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிறுபோக அறுவடைக்காலத்திற்கு முன்னரே நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலையில் தேங்கியுள்ள ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உரியவகையில் அகற்றப்பட்டு, சிறுபோகத்தில் அறுவடைசெய்யப்படுகின்ற நெல்லை விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி கொள்வனவுசெய்வதற்கு ஏற்றவாறு களஞ்சியசாலைகள் தயார் நிலையில் இருக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு வன்னி மாவட்ட அபிவிருத்தி…

மேலும் படிக்க