செய்திகள் தாயகச் செய்தி 

குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி

குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; பாலத்தை அமைக்க நிதிஒதுக்கீடுசெய்யப்படும் – பிரதமசெயலாளர் தனுஜா முருகேசன் பதில் வவுனியாவடக்கு பாரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டிப் பாலத்தை நிர்மாணிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு மாவட்டசெயலக மாநாட்டுமண்டபத்தில் 10.02.2026இன்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையினை முன்வைத்திருந்தார். அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் விமல் ரத்நாயக்க வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விளக்கங்கோரியிருந்தார். அந்தவகையில் 19மீற்றர் நீளமான குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாள 80மில்லியன்ரூபா அளவில் நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் பதில் வழங்கியிருந்தார். இந்நிலையில் மிகவும் பின்தங்கிய…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழில் துப்பாக்கி சூட்டு வாகனத்திலிருந்து மீட்கப்பட்ட வாள்

சமிக்ஞையை மீறி சென்றதாக கூறி இன்று அதிகாலை அல்லைப்பட்டி பகுதியில் வைத்து, ஹையேஸ் வாகனம் ஒன்றின் மீது ஊர்காவல்துறை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்நிலையில் குறித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று காவல்துறையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு இளைஞர்கள் குறித்த வாகனத்தில் இருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வடக்கு மற்றும் கிழக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்

வடக்கு மற்றும் கிழக்கு உலக வங்கியின் 1,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவித் திட்டத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைந்த அபிவிருத்திக்காக 100 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2026 முதல் 2031 வரை முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் சுற்றுலா, மீன்பிடித் துறை மேம்பாடு மற்றும் தனியார் முதலீடுகளைக் கவருதல் ஊடாகப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

வருமானத்தை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தம்!

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கவும், வரி முறையை வலுப்படுத்தவும் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025.05.19 இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட சட்டமூலம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.குறித்த புதிய சட்டமூலத்தை விரைவில் அரச வர்த்தமானியில் வெளியிடவும், பாராளுமன்ற அங்கீகாரத்தை பெறவும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்து கின்ற வலியே மகாவலி அதிகார சபை.ரவிகரன் எம்.பி

தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை எனச்சுட்டிக்காட்டி கிவுல் ஓயா திட்டத்தை கடுமையாக எதிர்த்த ரவிகரன் எம்.பி தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செயற்படுகளில் ஈடுபடும் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்களினாலேயே தேசியமக்கள் சக்தியின் ஆட்சி வீழ்ச்சியடையுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் 09.02.2026இன்று இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ■ கடுமையான அழுத்தங்களினாலேயே…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பா பிளக்கப்படுகிறது பிரஸ்ஸல்ஸை உண்மையான எதிரியாக அறிவிக்கும் ஓர்பன்

✦ ஐரோப்பா பிளக்கப்படுகிறது ✦ பிரஸ்ஸல்ஸை உண்மையான எதிரியாக அறிவிக்கும் ஓர்பன் ⧉════════❁════════⧉ ✦ நாகரிக மோதலாக மாற்றப்பட்ட ஒரு தேர்தல் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது நீண்டகால மோதலை, ஒரு சாதாரண அரசியல் போட்டியாக அல்லாமல், ஒரு “நாகரிகப் போராட்டமாக” பகிரங்கமாக மறுஅர்த்தமளித்துள்ளார். சோம்பதேலி (Szombathely) நகரில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர், 2026 ஏப்ரல் 12 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் உள்நாட்டு அரசியல் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் ஒன்றல்ல; மாறாக, ஹங்கேரி ஒரு இறையாண்மை கொண்ட நாடாக உயிர்வாழுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என அறிவித்தார். “பிரஸ்ஸல்ஸ்” என்பதையே தனது உண்மையான எதிரியாகக் குறிப்பிடுவதன் மூலம், ஓர்பன் ஹங்கேரியத் தேர்தலை திட்டமிட்டு சர்வதேச மயமாக்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வெளிசக்தியாக செயல்பட்டு, ஹங்கேரியில் போருக்கு ஆதரவான, உக்ரைன் சார்பு…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கை களில் இலங்கை கடற்படை

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூ. 1200 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக ரூ. 1000 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளது. அத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பஸ்கள் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும். கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட் டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருகோணமலை டச்சு பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (09) காலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் அடங்கலாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தின் அனுமதி இன்றி புத்தர் சிலை நிறுவப்பட்டு கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த திணைக்களம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

குடும்பிமலை பிரதேசத்தில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு.

சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை காவல்துறை.தெரிவித்தனர். இது தொடர்பாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குடும்பிமலை பிரதேசத்தில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் அண்மையில் இவை மீட்கப்பட்டதாகவும் இந்த ரொக்கட் லோஞ்சர்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை.தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை  காவல்துறை. மேலும் குறிப்பிட்டனர். இதனையடுத்து, இந்த ஆயுதங்கள் எவ்வாறு அந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டன, யாரால் மற்றும் எந்த நோக்கில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படைகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை…

மேலும் படிக்க