செய்திகள் தாயகச் செய்தி 

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி;

வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரைச் சந்தித்தார் ரவிகரன் எம்.பி; வீதிச் சீரமைப்புக்கள் குறித்து கலந்துரையாடல் முல்லைத்தீவுமாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 23.02.2026நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வீதிஅபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சீரின்றிக் காணப்படும் வீதிகளின் சீரமைப்பு மற்றும் வய்க்கால் சீரமைப்புத் தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

எல் மென்சோ — உலகின் மிக ஆபத்தான கார்டெல் வியூகவாதியின் எழுச்சி, ஆட்சி மற்றும் வீழ்ச்சிஒரு நிழல் பேரரசின் முடிவு

எல் மென்சோ — உலகின் மிக ஆபத்தான கார்டெல் வியூகவாதியின் எழுச்சி, ஆட்சி மற்றும் வீழ்ச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦ ஒரு நிழல் பேரரசின் முடிவு ‘எல் மென்சோ’ என அறியப்பட்ட நெமேசியோ ரூபன் ஒஸ்குவேரா செர்வாண்டஸ் கொல்லப்பட்ட சம்பவம், 21-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தபால்பா மலைப்பகுதியில் அமைந்திருந்த ரகசிய கட்டளைத் தளத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர ராணுவ நடவடிக்கையிலேயே அவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சண்டையின் போது கடுமையாக காயமடைந்த அவர், அவசர சிகிச்சைக்காக விமானம் மூலம் மாற்றப்பட்டபோது உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே வன்முறைச் செயல்கள் வெடித்தது, அவர் இறந்த பின்னரும் அவரது கட்டளை வலையமைப்பு செயல்பாட்டிலேயே இருந்ததை வெளிப்படுத்தியது. ✦ ஒரு கார்டெல் வடிவமைப்பாளரின் பின்னணி எல் மென்சோவின் வாழ்க்கை…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…!

பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்…! கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். ​குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டார். ​இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள 34 காற்றாலைகளில், சுமார் 9 காற்றாலைகள் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளிலும், செழிப்பான தென்னந்தோப்புக் காணிகளிலும் அமைக்கப்படவுள்ளன. இதனால் சுமார் 2,500க்கும் மேற்பட்ட காய்க்கும் தென்னை மரங்கள்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் இறுதிக் கலந்துரையாடல்!

வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண  மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறைமாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய  அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே இந்திய துணைத் தூதரக அதிகாரி செல்வி. சி. எஸ். றம்மியா ஆகியோர் பங்குபற்றினார்கள். இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரச அதிபர், வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான இறுதிக் கலந்துரையாடலாக…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடிற்ற ப்பட்ட சம்பவம் மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக் கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக 30 மாணவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனத் தெரியவருகின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி, இது தொடர்பான இறுதி முடிவு ஆணைக்குழுவின் அடுத்த கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு இம்மாதம் 11ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கோரியிருந்தது.இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது.குறித்த விசாரணை அறிக்கையானது கடந்த வாரம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.தேசிய புலனாய்வு முகவரியினால் வழங்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து;

செம்மலை பெரியகுளக்கட்டுச் சீரமைக்குமாறும் புளியமுனையில் யானைவேலி அமைக்குமாறும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து; வெள்ளியன்று நிலமைகளைப் பார்வையிட நேரில் வருகிறார் – கமநல உதவி ஆணையாளர் முல்லைத்தீவு – செம்மலை பெரியகுளத்தின் கட்டைச் சீரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், செம்மலை கிழக்கு பகுதியிலுள்ள புளியமுனையில் யானைவேலி அமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கமநல உதவி ஆணையாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கைவிடுத்தது, குறித்த இடங்களுக்கு நேரில் வருகைதந்து பார்வையிடுமாறும் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், எதிர்வரும் 27.02.2026 வெள்ளிக்கிழமையன்று குறித்த பகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த 22.02.2026அன்று செம்மலைப் பகுதியில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியதுடன்,…

மேலும் படிக்க
செய்திகள் தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இந்தியாவின் விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா மாவட்டத்தில் நடந்த விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.ரெட்பேர்ட் ஏர்வேஸுக்குச் சொந்தமான விமான ஆம்புலன்ஸ் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.நேற்று (23) இரவு 7:11 மணிக்கு ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புது டில்லிக்கு புறப்பட்ட விமானம், இரவு 7:30 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்துவிட்டது.அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விமானம் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், விபத்தானது, இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவர்களில், இரண்டு பணியாளர்களும் ஒரு நோயாளியும் அவரது உறவினர்களும் அடங்குவதாக மேலும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க