சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் அமைப்புகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கோரி முக்கிய கலந்துரையாடல்!
சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் அமைப்புகளின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கோரி நாடாளுமன்ற உறுப்பினருடன் முக்கிய கலந்துரையாடல்! நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தினால், சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளவுள்ள இடர்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாணச் சமூகச் செயற்பாட்டு மையம் மற்றும் அதனுடன் இணைந்த கிராமிய நுண்கடன் சேவை வழங்கும் அமைப்புகள் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தன. குறித்த கலந்துரையாடலில், நிதியமைச்சினால் முன்மொழியப்பட்ட இச் சட்டத்தினால் நுண்கடன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏற்படப்போகும் இடையூறுகள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இச்சட்டமானது நுண்கடன் சேவை வழங்குநர்களையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருந்தாலும், ஏனைய விடயங்கள் அக்குறிக்கோளைப் பாதிப்பதாக அமைந்துள்ளன. மிகக் குறிப்பாக: 1.சமூக சேமிப்பு மற்றும் நுண்கடன் சேவை வழங்குநர்களை…
மேலும் படிக்க