சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்;

தமது காணிகளை பறித்து சிங்களவர்களுக்கு வழங்கும் ஒரு கட்டமைப்பாகவே தமிழர்கள் மகாவலியை நோக்குகின்றனர்; பாதகமான கிவுல் ஓயா திட்டத்தை ஒருபோதும் ஏற்கோம் என கடுமையாக எதிர்த்த – ரவிகரன் எம்.பி தமது காணிகளை பறித்து பெரும்பான்மையினத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்ற ஒரு கட்டமைப்பாக மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் வெறுப்போடு நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுப்பதற்கு முயற்சிக்கப்படும் தமிழ் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதகமான கிவுல் ஓயாத் திட்டத்தினை ஒருபோதும் தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் 17.01.2026இன்று கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான விசேடகலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினரால் இவ்வாறு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறித்த…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

ஆனையிறவுப் பெருஞ்சமர் 2000: ஈழத்தமிழரின் போரியல் மேலாதிக்கமும் கரும்புலிகளின் தொழில்நுட்பப் பாய்ச்சலும்

ஆனையிறவுப் பெருஞ்சமர் 2000: ஈழத்தமிழரின் போரியல் மேலாதிக்கமும் கரும்புலிகளின் தொழில்நுட்பப் பாய்ச்சலும் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ 📝 முன்னுரை ஈழப்போரின் வரலாற்றில் 2000-ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘ஓயாத அலைகள் – 3’ சமர், ஒரு விடுதலை அமைப்பு மரபுவழி இராணுவமாக (Conventional Army) முழுமை பெற்றதை உலகிற்கு நிரூபித்த தருணமாகும். பல தசாப்தங்களாக இலங்கை இராணுவத்தின் பிடியில் இருந்த, இயற்கையிலேயே பாதுகாப்புக் கோட்டையாக விளங்கிய ஆனையிறவு (Elephant Pass) தளம் வீழ்த்தப்பட்ட விதம், உலக இராணுவ ஆய்வாளர்களை இன்றும் வியப்பில் ஆழ்த்தும் வரலாற்றுப் பாடமாகும். 🌊 குடாரப்பு தரையிறக்கம்: ஒரு இராணுவ அதிசயம் ஆனையிறவுத் தளத்தை வீழ்த்துவதற்கான குடாரப்பு தரையிறக்கம், புலிகளின் போரியல் வரலாற்றில் மிகத் துணிச்சலான நகர்வாகும். * மறைமுகத் தாக்குதல் வியூகம்: தளத்தின் முன் கதவை உடைக்காமல், கடல் வழியாகப் பின்வாசல் வழியில் நுழைந்து எதிரியை நிலைகுலையச்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

பிரித்தானிய துணைப் பிரதமர் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்தார்.

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17) காலை. இலங்கை வந்தடைந்தார். டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர். தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17) காலை 09:11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர்கள் அறைக்கு வருகை தந்திருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானிய துணைப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

மிகைஊழியர் அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன்

மிகைஊழியர் அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி; பதில் வழங்க இருவாரகால அவகாசம் கோரினார் பிரதமர் ஹரிணி அமரசூரிய இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்படுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனஞ்செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் பதிலுக்காக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகள் வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் 17.02.2026இன்று நாடாளுமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த கேள்விகளுக்கான பதிலை வழங்குவதற்கு இன்னும் இரண்டுவார கால அவகாசத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய கோரியுள்ளார். குறித்த மிகை ஊழியர் அடிப்படையில் நியமனஞ்செய்யப்பட்ட அதிபர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 22.08.2025ஆம் திகதியன்று…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் கைது

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று (15) மற்றும் இன்று (16) ஆகிய தினங்களில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ஜனாதிபதி எதிர்வரும் 19ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார். இந்திய பிரதமரின் தலைமையில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.மேலும் குறித்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க