செய்திகள் தாயகச் செய்தி 

தமிழர்களுக்கு பாதகமான கிவுல் ஓயாத் திட்டம்; மக்களுக்கு விளிப்பூட்டுவது தொடர்பில் கலந்துரையாடல்

தமிழர்களுக்கு பாதகமான கிவுல் ஓயாத் திட்டம்; மக்களுக்கு விளிப்பூட்டுவது தொடர்பில் கலந்துரையாடல் மகாவலி அதிகாரசபையின் (எல்)வலயத்தினால் செயற்படுத்தப்படவுள்ள தமிழர்களுக்குப் பாதகமான கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கி, தமிழ் மக்களை விளிப்படையச் செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று 15.02.2026நேற்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது, மறைந்த ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் நினைவேந்தலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தமிழ் மக்களுக்கு கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதக நிலைதொடர்பில் தெளிவூட்டி விளிப்படையச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது. மேலும் இக்கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன், முல்லைத்தீவு ஊடக அமையத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள், சிவில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

முல்லை திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதி அறிவியல் நகர் யாழ் பல்கலைக்கழகம் செல்லும் வீதி அண்மித்த பகுதியில் (15.02.2026)  நேற்றைய தினம்.பகல் 1.50 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி பகுதியில் இருந்து முறிகண்டி பகுதி நோக்கி பயணித்த மகிழுந்து கார் முறிகண்டி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த சிறிய ரக மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.  இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.   மகிழுந்து காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியசாலையின் வைத்தியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்து தொடர்பாக முல்லைத்தீவு மாங்குளம்காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

2025 கல்வி சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்.!

ப்ரவரி 17 முதல் தொடங்குகிறது.இம்முறை, 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் கலந்து கொள்கின்றனர் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை நாளை முதல் பிப்ரவரி 26 வரை நடைபெறும். பரீட்சை நடைபெறுமுன், பரீட்சார்த்திகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக தங்கள் மத்திய நிலையங்களில் இருப்பது அவசியமாகும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, பரீட்சைக்கு தோற்ற மாணவர்கள் இன்று மனதை அமைதியாகவும் சுமூகமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் விசேஷ மனநல மருத்துவர் மியரு சந்திரதாச பரிந்துரை செய்துள்ளார். மாணவர்கள் தங்கள் படிப்பில் மன அழுத்தமின்றி கவனம் செலுத்துவதன் மூலம் பரீட்சைச் சோதனையில் சிறந்த முடிவை பெறலாம்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர்

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.   ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்த இளைஞர் மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டாரவெளி வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய முஜாஹித்  முஹம்மது சஹ்ரின் என தெரியவந்துள்ளது.குறித்த இளைஞர்  கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும், சம்பவ தினம் தலை முடி வெட்ட சிகை அலங்கரிப்பு நிலையம் சென்ற நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் நேற்று இரவு சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் ஐவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

சந்தியில் நேட்டோ (NATO): ஐரோப்பாவின் எழுச்சி, அமெரிக்காவின் திசைமாற்றம் மற்றும் மேற்கத்திய பாதுகாப்பின் மறுவடிவம்

சந்தியில் நேட்டோ (NATO): ஐரோப்பாவின் எழுச்சி, அமெரிக்காவின் திசைமாற்றம் மற்றும் மேற்கத்திய பாதுகாப்பின் மறுவடிவம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ✦ ஒரு கட்டமைப்பு மாற்றம் — வீழ்ச்சி அல்ல ✦ 2026 ஆம் ஆண்டின் Munich Security Conference வெறும் உரைகளுக்கான மேடையாக இல்லை; அது அட்லாண்டிக் கூட்டணியின் உள்ளே நிகழும் ஆழமான மாற்றத்தை உலகிற்கு வெளிப்படுத்திய தருணமாக அமைந்தது. North Atlantic Treaty Organization (நேட்டோ) அமைப்பிற்குள் இப்போது நடைபெறுவது ஒரு திடீர் அமெரிக்க விலகல் அல்ல — அது ஒரு கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு. ஐரோப்பா இனி அமெரிக்க பாதுகாப்புக் குடையின் கீழ் இரண்டாம் நிலைப் பங்காளியாக இருப்பதை ஏற்கத் தயாராக இல்லை. நிதிச் சுமை, செயல்திறன், அரசியல் செல்வாக்கு — இவை அனைத்தும் அட்லாண்டிக் கடலைக் கடந்து புதிய சமநிலையை நோக்கி நகர்கின்றன. நேட்டோ சிதறவில்லை.…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகள்;

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுமூகமாக இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகள்;  தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 15.02.2026இன்று சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றன. குறித்த பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். குறிப்பாக கடந்தகாலங்களில் வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரிதின வழிபாடுகளில் பொலிசாரால் கடுமையான குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுவந்தன. இந்நிலையில் இம்முறை இடம்பெறும் சிவராத்திரி தின பூசை வழிபாடுகளில் குழப்பங்கள் ஏற்படுத்தப்படாது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை பாதுகாக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 13.02.2026அன்று இடம்பெற்ற வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தார். அதன்போது சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுமென வன்னிமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி…

மேலும் படிக்க