காணொளி சிறப்புச் செய்தி 

ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடுகளுக்கு சைவப் பெருமக்கள் அணிதிரளவேண்டும் – ரவிகரன்

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி வழிபாடுகளுக்கு சைவப் பெருமக்கள் அணிதிரளவேண்டும் – ரவிகரன் எம்.பி அழைப்பு வவுனியா வடக்கில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலமான ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 15.02.2026 நாளையதினம் இடம்பெறவுள்ள சிவராத்திரி தின விசேட வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக சைவப்பெருமக்கள் அனைவரும் அணிதிரண்டு வருகைதரவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். வெடுக்குநாறி தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடம் என்ற உரிமையை தொடர்ந்தும் நிலைநாட்டிட அனைத்துச் சைவப்பெருமக்களும் அணிதிரண்டு கலந்துகொள்ளவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த அழைப்புச்செய்தியினூடாகத் தெரிவித்துள்ளார். மேலும் கடந்தகாலங்களில் ஆட்சியாளர்களாலும், அரச இயந்திரங்களாலும் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சிவராத்திரி வழிபாடுகளின்போது சைவப்பெருமக்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இம்முறை சைவப்பெருமக்களின் வழிபாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படாதென கடந்த வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அரசாங்கத்தரப்பு பிரதிநிதிகளால் உறுதியளிக்கப்பட்டிருப்பதாகவும்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன்

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன வாய்க்காலை அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்து. வவுனியா – ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கா அமைப்பின் கீழ் காணப்படும் புல்மோட்டை வயல்வெளிக்குரிய அணைக்கட்டை அமைப்பதுடன், நீர்ப்பாசன வாய்க்கால் சீரமைப்பை மேற்கொள்ளுமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கூடியவிரைவில் உரிய திட்டங்களில் உள்வாங்கப்பட்டு குறித்த புல்மோட்டை வெளிக்குரிய அணைக்கட்டை அமைக்கவும், நீர்ப்பாசன வாய்க்காலைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென வவுனியா பிரதேசசெயலாளர் மற்றும் ஓமந்தை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் பதில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.02.2026நேற்று இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஓமந்தை கமநலசேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட பெரியவிளாத்திக்குளம் கமக்கார அமைப்பின்கீழுள்ள புல்மோட்டை வெளிக்கான அணைக்கட்டு அமைக்கவும்,…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ரஷ்யாவின் டிஜிட்டல் ராணுவச் சட்டமா? தொடர்பு துண்டிப்பு பொத்தான்களி லிருந்து ஐரோப்பாவின் புதிய பனிப்போர் முனைப்பரப்புவரை

ரஷ்யாவின் டிஜிட்டல் ராணுவச் சட்டமா? தொடர்பு துண்டிப்பு பொத்தான்களிலிருந்து ஐரோப்பாவின் புதிய பனிப்போர் முனைப்பரப்புவரை — மறுசீரமைக்கப்படும் ஒரு உலக மூலோபாயக் கட்டமைப்பு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ ஆய்வாளர் •───────────────────• ✦. டிஜிட்டல் இறையாண்மையா? அல்லது டிஜிட்டல் ராணுவச் சட்டமா? ரஷ்ய கூட்டமைப்பிற்குள் ஒரு ஆழமான கட்டமைப்பு மாற்றம் அமைதியாக உருவாகிக் கொண்டிருக்கிறது. “பாதுகாப்பு அச்சுறுத்தல்” என்ற தெளிவற்ற வரையறையின் கீழ், மொபைல் இணையம், அதிவேக இணைய இணைப்புகள், நிலைத்தொலைபேசிகள் மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு வழிகளையும் உடனடியாக முடக்கும் அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு சேவைக்கு வழங்குவதற்கான சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக அவசர ஆணை அல்ல. இது டிஜிட்டல் ஆட்சி அமைப்பின் மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வடிவமைப்பு. இந்த…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை விமர்சித்தால் கடும் நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள் தீர்மானங்களை பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அவர் அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால் மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் ஆரம்பமான அநீதிக்கான ஒன்றுகூடல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் கண்டன கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. கிளிநொச்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த அநீதிக்கான ஒன்றுகூடல் இன்று (14) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.இந்த கண்டனக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்கப்பட்டிருந்தார்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின்அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். கட்சியின் எந்த உயர் சபை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ஆட்பதிவுத் திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.drp.gov.lk என்ற தளத்திற்குச் சென்று, குறித்த விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் பரீட்சார்த்திகள் இருப்பின், அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங்குவதற்காக மாத்திரம் இன்று (14) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலக கிளைகளை முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை திறந்து வைக்கவும் அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத, இம்முறை  க.பொ.த…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

காணிக்குள் கால் வைத்தால் சுடுவோமென மிரட்டுகிறார்கள்! நீதி கோரும் வெற்றிலைக்கேணி விவசாயிகள்

யாழ்ப்பாணம் – வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது அத்தோடு குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்டால் இடியன் துவக்கால் சுடுவோம் என்றும், பொலிசாரை வைத்து கைது செய்வோம் என மிரட்டுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாயிகள், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள்  விவசாயம் செய்துவந்த நிலையில் அப்பகுதியில் காணப்பட்ட பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி அடைக்கப்பட்ட குறித்த காணி அரசகாணி எனவும் நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ள நிலையில் இதுவரை உரிய அதிகாரிகளால்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதி

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன தலைமையில் 2026.02.06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோது, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு என்பவற்றுக்கான 2026 வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பான செயற்திட்டம் குறித்துக் கலந்துரையாடிய போதே அதிகாரிகள் இதனைக் குறிப்பிட்டனர். இதன்போது, ஜனாதிபதியின் ஆலோசகர் (கலாநிதி) ஹான்ஸ் விஜேசூரிய, நாட்டின் ஒவ்வொருவருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கும் வேலைத்திட்டம் குறித்துக் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த வருடத்திற்குள் 100 புதிய தொலைபேசித் தொடர்பாடல் கோபுரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தேசியத்…

மேலும் படிக்க