Day: February 9, 2026
தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்து கின்ற வலியே மகாவலி அதிகார சபை.ரவிகரன் எம்.பி
தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை எனச்சுட்டிக்காட்டி கிவுல் ஓயா திட்டத்தை கடுமையாக எதிர்த்த ரவிகரன் எம்.பி தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செயற்படுகளில் ஈடுபடும் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்களினாலேயே தேசியமக்கள் சக்தியின் ஆட்சி வீழ்ச்சியடையுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் 09.02.2026இன்று இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ■ கடுமையான அழுத்தங்களினாலேயே…
மேலும் படிக்கஐரோப்பா பிளக்கப்படுகிறது பிரஸ்ஸல்ஸை உண்மையான எதிரியாக அறிவிக்கும் ஓர்பன்
✦ ஐரோப்பா பிளக்கப்படுகிறது ✦ பிரஸ்ஸல்ஸை உண்மையான எதிரியாக அறிவிக்கும் ஓர்பன் ⧉════════❁════════⧉ ✦ நாகரிக மோதலாக மாற்றப்பட்ட ஒரு தேர்தல் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது நீண்டகால மோதலை, ஒரு சாதாரண அரசியல் போட்டியாக அல்லாமல், ஒரு “நாகரிகப் போராட்டமாக” பகிரங்கமாக மறுஅர்த்தமளித்துள்ளார். சோம்பதேலி (Szombathely) நகரில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர், 2026 ஏப்ரல் 12 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் உள்நாட்டு அரசியல் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் ஒன்றல்ல; மாறாக, ஹங்கேரி ஒரு இறையாண்மை கொண்ட நாடாக உயிர்வாழுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் என அறிவித்தார். “பிரஸ்ஸல்ஸ்” என்பதையே தனது உண்மையான எதிரியாகக் குறிப்பிடுவதன் மூலம், ஓர்பன் ஹங்கேரியத் தேர்தலை திட்டமிட்டு சர்வதேச மயமாக்கியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஒரு வெளிசக்தியாக செயல்பட்டு, ஹங்கேரியில் போருக்கு ஆதரவான, உக்ரைன் சார்பு…
மேலும் படிக்ககச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு முன்னாயத்த நடவடிக்கை களில் இலங்கை கடற்படை
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூ. 1200 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக ரூ. 1000 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளது. அத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பஸ்கள் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும். கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில்…
மேலும் படிக்கதிருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட் டோருக்கு நீதிமன்றின் உத்தரவு
திருகோணமலை டச்சு பே கடற்கரைக்கு அருகில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்கள் இன்று (09) காலை திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் அடங்கலாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில், கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தின் அனுமதி இன்றி புத்தர் சிலை நிறுவப்பட்டு கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த திணைக்களம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள்…
மேலும் படிக்ககுடும்பிமலை பிரதேசத்தில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு.
சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டதாக வாழைச்சேனை காவல்துறை.தெரிவித்தனர். இது தொடர்பாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குடும்பிமலை பிரதேசத்தில் அரங்கலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் அண்மையில் இவை மீட்கப்பட்டதாகவும் இந்த ரொக்கட் லோஞ்சர்கள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை.தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட ரொக்கட் லோஞ்சர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணையை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை காவல்துறை. மேலும் குறிப்பிட்டனர். இதனையடுத்து, இந்த ஆயுதங்கள் எவ்வாறு அந்தப் பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டன, யாரால் மற்றும் எந்த நோக்கில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன என்பதைக் கண்டறிய பாதுகாப்புப் படைகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை…
மேலும் படிக்கசாணக்கி யனின் நியமனம்; கட்சிக்குள் புதிய சர்ச்சை.சீ.வி.கே. சிவஞானம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரிய வருகிறது. கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா. சாணக்கியன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரன் அறிவித்துள்ள போதும், இவரது நியமனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென சீ.வி.கே.சிவஞானம் அறிவித்துள்ளார். இதிலிருந்து, இந்நியமனம் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, இவ்விடயத்தில்கூட கருத்து ஒற்றுமைப்பட முடியாதுள்ள இக்கட்சி, எதிர்கால அரசியல் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வியையே மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தலைமைப் பதவிகளைச் சுற்றிய உள்முரண்பாடுகள் தொடருமாயின், அது கட்சியின் நம்பகத்தன்மையையும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தனிநபர் ஆதிக்கங்களை விட கட்சியின்…
மேலும் படிக்க