சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ மனு தாக்கல்.

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தது.அதன் பின்னர் இந்தத் தடை இந்தியாவால் அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தடையானது நீடிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை U.A.P.A தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, வைகோ 2013 இல் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் நீதிபதி…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

யாழ். மானிப்பாய் வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது

குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்கு கொண்டு செல்வதற்காக மேலும் இருவர் நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் காத்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.அதற்கமைய, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அந்த இரு நபர்களும் கைது கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் அடிக்கடி வான்பயணங்களை மேற்கொள்ளும் ஒரு வர்த்தகர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர் அவர் இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய்லாந்து ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.குறித்த பயணியின் பயணப் பையின் ரகசியப் பகுதியில்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் டிப்பர் வாகனம் விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், ஒலுவில் பிரதேசத்தில் இன்று (06) காலை 8.00 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்னொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது வாகனத்தில் இருந்த ஏராளமான நெல் மூட்டைகள் வீதியோரத்தில் சிதறின. எனினும், வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுவதால், சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார்…

மேலும் படிக்க
காணொளி சிறப்புச் செய்தி 

அக்கரை வெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச்செல் முடியாமல் அவதியுறும் விவசாயிகள்;

  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடிஇறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிபுல் ஓயாஎதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்:தவிசாளர் குற்றச்சாட்டு!

கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை காரணமாக வைத்து பழிவாங்கும் பிரதி அமைச்சர்: வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு! கிபுல் ஓயாத் திட்டத்தை நிறுத்தக்கோரி இடம்பெற்ற போராட்டத்திற்கு பழி வாங்கும் விதமாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சாட்டியுள்ளார். வவுனியா தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிபுல் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என்று எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு அரச தரப்பால் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்வகையில் இன்றையதினம் (03.02) வெலிஓயா என மாற்றப்பட்ட மணலாறு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெற்றது. அதில் நான் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அந்தகூட்டத்தில் எனக்கு…

மேலும் படிக்க