பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு
வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை; பல்கலை மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு தமிழர்கள் அனைவரும் அணிதிரள்க – ரவிகரன் எம்.பி அழைப்பு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே 04.02.2026நாளையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” என்னும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரண்டு ஆதரவு நல்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அழைப்புவிடுத்துள்ளார். குறித்த “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்புவிடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு 03.02.2026இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்படும்…
மேலும் படிக்க