காணொளி சிறப்புச் செய்தி 

யாழ் பல்கலைக் கழகத்தில் வெடித்தது போராட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தில் வெடித்தது போராட்டம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்களை கைது செய்த சம்பவத்திற்க்கு எதிர்ப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை போராட்டம் நடைபெற்றது.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

யாழ் , புத்தூர் பகுதியில் விபத்து இளைஞன் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த 2 இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , புத்தூர் பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வீதி வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய , புத்தூர் பகுதியை சேர்ந்த 25…

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

திருகோணமலை -சேருநுவர பகுதியில் மகிழுந்து விபத்து

திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு திருகோணமலை திரும்பியோர் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளானது மட்டக்களப்பில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு திருகோணமலை திரும்பியோர் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளானது திருகோணமலை -சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள சேருநுவர பகுதியில் வைத்து மகிழுந்து  ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் மகிழுந்தில் பயணித்தோர் காயங்களான்றி தெய்வாதீனமான முறையில் உயிர்தப்பியுள்ளனர். இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்புக்கு திருமண வீட்டுக்குச் சென்று திருகோணமலை நோக்கிவரும்போது தூக்க களக்கத்தினால் இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக காவல்துறைதுறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

வேலன் சுவாமிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்

தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார் சிவகுரு ஆதின முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தின்போது மதகுரு எனவும் பாராது வேலன் சுவாமிகள் வலுக்கட்டாயமாக  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். நேற்று மதியம் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் பலாலி  காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டிருந்தவேளை வேலன் சுவாமிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க