இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சட்ட விரோதமான “குஷ்” போதைப் பொருளை இலங்கை க்கு கடத்தி இந்தியர் கைது

சட்டவிரோதமான “குஷ்” போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்து, அதனை விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இந்தியர் ஒருவர் இன்று (09) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருள் சுமார் ரூ. 2 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டடுள்ளதகைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய இந்திய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் இன்று (09) அதிகாலை 12.10 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ‘எயார் ஏசியா’ (AirAsia) நிறுவனத்திற்கு சொந்தமான AK-047 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.சந்தேகநபர் கொண்டு வந்த 2 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, அதில் 6 பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 762 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இந்திய வர்த்தகரும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (09) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 

Leave a Comment