பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்!
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்துப் போராட்டம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும், புதிய ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தென்மராட்சியில் நேற்றைய தினம் பாரிய கையெழுத்துப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நேற்று காலை தென்மராட்சிப் பிரதேசத்தின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய நகரப்பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் திரட்டப்பட்டன.
இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில்:சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர்சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான செ.மயூரன் மற்றும் கு.தினேஸ்உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கையெழுத்துக்களைப் பதிவு செய்தனர்.

