அண்மை செய்தி உலக செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இராணுவ நடவடிக் கையை பிரான்ஸ் ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு “முன்னோடியில்லாத” இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார்.

சர்வதேச எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் தனது கடற்படையின் ஒரு பெரும் பகுதியை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.இது ஒரு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கை என பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment