அண்மை செய்தி தாயகச் செய்தி 

முல்லை இளையோ ரின் விளையாட்டு திறனை மேம்படு த்தும் நோக்கில் பூப்பந் தாட்ட பயிற்சி முகாம்

முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி

 

முல்லைத்தீவு மாவட்ட இளையோரின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் 13 வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் இளையோருக்கான பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் மற்றும் போட்டி நிகழ்வு நேற்றையதினம் 07.03.2026 சனிக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு துறை பூப்பந்தாட்ட சங்கம் மற்றும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் இணைந்து, தமிழர் புலம்பெயர் பூப்பந்தாட்ட அமைப்பான UBF அமைப்பின் நிதி அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இளையோரின் பூப்பந்தாட்ட விளையாட்டு திறனை வளர்த்தெடுத்து எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுமார் 60 இளையோர் கலந்து கொண்டு பயிற்சியிலும் போட்டியிலும் உற்சாகமாக பங்கேற்றனர். நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய கலாநிதி சாந்தன், வைத்திய கலாநிதி மயூரன், மாவட்ட சுகாதார சேவை பணிமனை வைத்திய அதிகாரி தனஞ்சயன், கோவில்குடியிருப்பு கிராம சேவையாளர் சீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் உமாமகேஸ்வரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளையோருக்கு சான்றிதழ்கள், கிண்ணங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட இளையோரிடையே பூப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் முக்கியமான முயற்சியாக அமைந்தது.

Leave a Comment