அண்மை செய்தி சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

துப்பாக்கிச் சூட்டுக் குப் பலியான சிறுவனின் கொலை க்கு நீதி வேண்டி போராட்டம்

கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கிச்  சூட்டுக்குப் பலியான அல்பினோ அருள் ஃபயாஸ் சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில், சிறுவனின் உறவுகள் காவல்துறைனருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் கலந்துகொண்டனர். குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில், நீதிமன்ற காவல்துறையினரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள், ஊர்காவற்றுறை காவல்துறை நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது,  காவல்துறையினரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் தாங்கி கோசமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக்காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான  காவல்துறை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை  காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாக குற்றம் சாட்டினர்.

அத்துடன், மிலேச்சத்தனமான கொலைகளை காவல்துறை இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

 

Leave a Comment