அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Comment