சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ உரை இரத்து இனப்படுகொலையே காரணம். தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழர்கள் மீது ராஜபக்ஷக்கள் நிகழ்த்திய இனப்படுகொலை காரணமாகவே, ஒக்ஸ்போர்ட் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று பிரிட்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- “ஒக்ஸ்போர்ட் யூனியன் ஏற்பாடு செய்த உரை அல்லது உரையாடல் நிகழ்வுகள் எந்தக் காரணத்துக்காகவும் இரத்துச் செய்யப்படுவதில்லை. அவ்வாறு இரத்துச் செய்வதை கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகவும், தன் புகழுக்கான இழுக்காகவும் அந்த நிறுவனம் கருதுகின்றது. இவ்வாறான நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ஒக்ஸ்போர்ட் உரை இரத்துச் செய்யப்பட்டமை அரிதான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதற்கு, நாமலின் குடும்பத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையே காரணம். நாமல் ராஜபக்ஷவின் குடும்பம் தமிழர்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் சொல்லொண்ணாத் துயரங்கள் உலகறிந்தவை. அந்தப் பாதகமான…

மேலும் படிக்க
செய்திகள் புலச் செய்திகள் 

இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் லண்டனில் போராட்டம்

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது அந்த வகையில் இந்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களிலும்  சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என கூறி போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில் பிரித்தானியாவிலும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது . தமிழர்களின் தன்னாட்சிக்கான உரிமைக் குரலாகவும், இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாளாகும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லண்டனில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்  கரியாலயம் முன்பாக இன்றையதினம் (04) காலை 11.00 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகி பேரணியாக  பாராளுமன்றம் வரை சென்று நிறைவடைந்தது இதில் லண்டனில் வாழும் புலம்பெயர் தமிழர்கள், லண்டன் மக்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு, இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தமிழர்களின்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்

சுவிஸ் நாட்டில் நேற்றைய தினம் துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம்   தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஐம்பதாவது அகவையில் தடம் பதித்துள்ள 2026 ஆண்டு தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலை அமைப்புக்குமிகவும் முக்கியமான காலப்பகுதியாகும். சுவிஸ் நாட்டில் BERN மாநகரில் நேற்றைய தினம் தேசத்தின் புதல்வி துவாரகா தலைமையில் அனைத்து உலக செயலக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை ஒழுங்கமைப்பு செய்தவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ விடுதலை புலிகள் சுவிஸ் கிளை பொறுப்பாளராக சமீப காலத்தில் நியமிக்கப்பட்ட திரு .ரகுபதி அவர்கள் ஆவார். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சமீபத்தில் எடுக்கப்பட்டநிழற் படம் யாருமே எதிர்பாரத வகையில் அதிரடியாக திரையில் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றி இருந்தார். தேசியத் தலைவர் அவர்களுக்கு துணையாகவும் பக்கபலமாகவும்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

இனவழி ப்பு நினைவுத் தூபி- கனடாவில் திறந்து வைக்கப்பட்டது

தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி- கனடாவில் திறந்துவைக்கப்பட்டது   பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு!! கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர். ஒளிப்படங்கள் https://www.facebook.com/profile.php?id=100063943606793

மேலும் படிக்க